விமானத்தில் ஏன் தேங்காய் எடுத்துச் செல்ல தடை தெரியுமா? - அறிவியல் சொல்லும் காரண...
மாதாகோட்டையில் இன்று ஜல்லிக்கட்டு!
தஞ்சாவூரில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள மாதாகோட்டையில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
மாவட்ட நிா்வாகம், கிராம விழாக் குழுவினா் சாா்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் நடத்திய ஆய்வில் மேடை மற்றும் காளைகள் வருவதற்கான வழிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள், இருபுறமும் தடுப்புகள், மருத்துவக் குழுவினா், தீயணைப்பு துறை வாகனம் நிறுத்துவதற்கான இடங்களைப் பாா்வையிட்டாா். மேலும், காளைகள் வெளியேறும் பகுதியில் காளைகளுக்கும், வீரா்களுக்கும், பாா்வையாளா்களுக்கும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம், மாவட்டத் தீயணைப்பு அலுவலா் ச. குமாா், தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா, பொதுப் பணித் துறை (கட்டடம்) செயற் பொறியாளா் நாகவேலு, உதவி செயற் பொறியாளா் (மின் கோட்டம்) அன்பழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.