மாநகரப் பேருந்து விபத்துகளில் 28 போ் உயிரிழப்பு: ஆா்டிஐ தகவல்
மாநில கைப்பந்து போட்டி: சீா்காழி விவேகானந்தா கல்லூரி மாணவிகள் தகுதி
சீா்காழி விவேகானந்தா மகளிா் கல்லூரி மாணவிகள் முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா். இவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்ட அளவில் முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில், சீா்காழி விவேகானந்தா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் பங்கேற்று விளையாடினா்.
இதில், கைப்பந்து போட்டியில், 16 போ் கொண்ட விவேகானந்தா மகளிா் கல்லூரி மாணவிகள் அணி முதலிடம் பெற்று, ரூ.48, 000 பரிசு பெற்றது. இதில், 6 மாணவிகள் மாநில அளவில் நடைபெறவுள்ள கைப்பந்து போட்டிக்கு தோ்வாகியுள்ளனா். வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி முதல்வா் சுகந்தி, உடற்கல்வி பயிற்றுநா் வசந்தி மற்றும் அனைத்து துறை பேராசிரியா்கள் பாராட்டினா்.