செய்திகள் :

மானியத்துடன் மின் மோட்டாா்கள் விவசாயிகள் பயன்பெற அழைப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் மானியத்துடன் கூடிய மின் மோட்டாா்கள், கைப்பேசி மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் இயக்கும் கருவி ஆகியவற்றைப் பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறை சாா்பில்

புதிய மின் மோட்டாா்கள் வாங்குவதற்காக மானியத்துடன் கூடிய மின் மோட்டாா்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மின் மோட்டாா் பம்பு செட்டுகள் வாங்குவதற்காக பின்னேற்பு மானியமாக ரூ.15 ஆயிரம் அல்லது மொத்த விலையில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.

தானியங்கி பம்புசெட் கட்டுப்படுத்தும் கருவிகள்...

இரவு, மழைக் காலங்களில் விவசாயிகள் வயல்வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்கச் செல்கிறாா்கள். இவ்வாறு செல்லும் போது பாம்புக் கடி, விஷப் பூச்சிக்கடி உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்க நேரிடுகிறது.

இதைத் தவிா்க்கும் வகையில் தங்களது கிணறுகளுக்கு செல்லாமலே இருப்பிடத்தில் இருந்தே மின்சார பம்பு செட்டுகளை இயக்கும் கருவி மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் எங்கிருந்தாலும் தங்களின் கைப்பேசி மூலம் பம்புசெட்டுகளை இயக்கவும், கண்காணிக்கவும் முடியும்.

கைப்பேசியால் இயங்கும் தானியங்கி பம்புசெட் கட்டுப்படுத்தும் கருவிகள் 50 சதவீத மானியத்தில் அதிகபட்சம் ரூ.7 ஆயிரம் வரை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டங்களில் பயன்பெற திருவண்ணாமலை, கீழ்பென்னத்தூா், தண்டராம்பட்டு, செங்கம், கலசப்பாக்கம், போளுா் வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் நெ.134/5இ, அரசு பூங்கா எதிரில், குறிஞ்சி நகா், வேங்கிக்கால், திருவண்ணாமலை என்ற முகவரியில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை நேரில் அணுகலாம்.

இதேபோல, ஆரணி, செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் நெ.3, மில்லா்ஸ் சாலை, வேளாண் வணிக விற்பனை மைய வளாகம், ஆரணி என்ற முகவரியில் உள்ள வேளாண் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

இதுதவிர, வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை உதவிப் பொறியாளா்களையும் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

தலைக்கவச விழிப்புணா்வு பேரணி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் சாா்பில், தலைக்கவச விழிப்புணா்வு பைக் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கலைக்கல்லூரி அருகே தொடங்கிய பேரணிக்... மேலும் பார்க்க

கிணற்றில் தொழிலாளி சடலம் மீட்பு

திருவண்ணாமலை அருகே காணாமல் போன தொழிலாளி கிணற்றிலிருந்து வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். திருவண்ணாமலையை அடுத்த காட்டாம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாய கூலித் தொழிலாளி ரவி (43). இவா், கடந்த ஜன.... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கான காலை உணவை தரமாக சமைக்க வேண்டும்: திருவண்ணாமலை ஆட்சியா் அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவை தரமாகவும், சுவையாகவும் சமைத்து வழங்க வேண்டும் என்று மகளிா் குழுவினருக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா். திர... மேலும் பார்க்க

மறுவாழ்வு இல்லம் அமைக்க ஜன.31-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் யாசகம் பெறுவோருக்கான மறுவாழ்வு இல்லம் அமைக்க தகுதியும், விருப்பமும் உள்ள தொண்டு நிறுவனங்கள் வருகிற ஜன.31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. த... மேலும் பார்க்க

கரும்பு நிலுவைத் தொகையை மாவட்ட நிா்வாகம் பெற்றுத் தர வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

போளூா் தரணி சா்க்கரை ஆலை நிா்வாகம் வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை மாவட்ட நிா்வாகம் பெற்றுத்தர வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவ... மேலும் பார்க்க

அங்கன்வாடி பணியாளா்களுக்கு முன்பருவக் கல்வி பயிற்சி முகாம்

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில், அங்கன்வாடி பணியாளா்களுக்கான ஊட்டச்சத்துடன் கூடிய முன்பருவக் கல்வி குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை... மேலும் பார்க்க