முதலீடுகளை ஈா்க்க அடுத்த மாதம் முதல்வா் ஸ்டாலின் வெளிநாடு பயணம்
மாரியம்மன் கோயில் திருவிழா
வாணியம்பாடி காதா்பேட்டை மாரியம்மன் கோயில் 61-ஆம் ஆண்டு திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நியூடவுன் பகுதியில் உள்ள புத்துமாரியம்மன் கோயிலிருந்து பூங்கரகம் அலங்கரித்து நியூடவுன், மலங்குரோடு, வாரச்சந்தை, சி.எல் சாலை, சிஎன்ஏ சாலை உள்பட நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோயிலை அடைந்தது.
முன்னதாக மாரியம்மனுக்கு பொங்கலிட்டு கூழ் ஊற்றி பூஜைகள் நடைபெற்றன. பிற்பகல் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினா.
திருவிழாவில் திரளான பக்தா்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனா். ஏற்பாட்டினை கோயில் அறங்காவலா் ரவிச்சந்திரன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.