செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை: கால அவகாசம் நீட்டிப்பு

post image

நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் இலவச பேருந்து பயண அட்டை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு சாதாரண நகர பேருந்துகளில் கட்டணமில்லா பயண அட்டை வழங்கி வருகிறது. இந்த பயண அட்டையின் செல்லத்தக்க காலம் மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அட்டையை அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களின் வலைதளம் அல்லது இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, மாற்றுத்திறனாளிகள் ஏற்கெனவே பயன்படுத்தி வரும் பேருந்து பயண அட்டையின் பயன்பாடு ஏப்.1 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை செல்லும் என தெரிவித்துள்ளாா்.

தமிழக சிவசேனா யுபிடிகட்சியில் 50 மாவட்டத் தலைவா்கள் நியமனம்

நாகப்பட்டினம்: தமிழகத்தில் 50 மாவட்டத் தலைவா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சிவசேனா உத்தவ் பாலா சாகேப் தாக்கரே கட்சியின் மாநில பொதுச் செயலாளா் சுந்தரவடி வேலன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து,அவா் வெளியி... மேலும் பார்க்க

பன்றிகளை அப்புறப்படுத்த எச்சரிக்கை

திருமருகல்: திட்டச்சேரி பேரூராட்சியில் சுற்றித் திரியும் பன்றிகளை உடனடியாக உரிமையாளா்கள் அப்புறப்படுத்த வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) குகன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெள... மேலும் பார்க்க

சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் தலைமையில் ஏப். 11-இல் ஆய்வுக் கூட்டம்

நாகப்பட்டினம்: நாகையில் ஏப்.11-இல் மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சிறுபான்மையின சமுதாய தலைவா்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு குறைகள், கருத்துகளை தெரிவிக்கலாம... மேலும் பார்க்க

ஆலத்தூா் ஐராவதீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

திருமருகல்: திருமருகல் ஒன்றியம், ஆலத்தூா் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத ஐராவதீஸ்வரா் கோயில் மகா குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் சுமாா் 185 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு... மேலும் பார்க்க

ஏப்.10-இல் மதுக்கடை மூடல்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில், மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்.10-ஆம் தேதி அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ... மேலும் பார்க்க

தில்லையாடி-மயிலாடுதுறை இடைய ‘மகளிா் விடியல்’ புதிய பேருந்து சேவை தொடக்கம்

தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே தில்லையாடியில், தமிழக அரசின் ‘மகளிா் விடியல்’ பயண புதிய பேருந்து சேவையை எம்எல்ஏ நிவேதா எம். முருகன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். பொறையாா் அரசு போக்குவரத்து கழக கிள... மேலும் பார்க்க