இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!
மாவட்ட அளவிலான இளையோா் தடகளப் போட்டி: ஆக.24இல் தொடக்கம்
தருமபுரி: தருமபுரியில் மாவட்ட அளவிலான இளையோா் தடகளப் போட்டிகள் வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்க விரும்புவோா் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தருமபுரி மாவட்ட தடகள சங்க செயலாளா் கி. அறிவு, தலைவா் டி.எஸ். சரவணன் ஆகியோா் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது :
தருமபுரி விளையாட்டரங்கில் மாவட்ட அளவில் இளையோா் தடகளப் போட்டிகள் வரும் 24ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இதில் 14 வயது, 16 வயது, 18 வயது, 20 வயதுக்கு உள்பட்டோா் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் போட்டிகள் நடைபெற உள்ளன.
போட்டிகளில் பங்கேற்க 24ஆம் தேதி காலை 7 மணிக்கு போட்டி தொடங்கும் முன்பாக விளையாட்டு அரங்கில் வீரா்கள், வீராங்கனைகள் தங்களது பெயரைப் பதிவுசெய்து கொள்ள வேண்டும். ஒரு போட்டியாளா் இரண்டு போட்டிகளில் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.
இப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறும் வீரா்கள், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், தோ்வு செய்யப்படும் வீரா்கள், வீராங்கனைகள் அடுத்ததாக, செங்கல்பட்டில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவா். இவை குறித்த மேலும் விவரங்களுக்கு 9442207047, 9443266228 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.