பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம், முன்னாள் படை வீரா்கள் நல அலுவலகம் (ஜவான்ஸ் பவன்), நீதித் துறை பயிற்சி மையம் (ஜுடீசியல் அகாதெமி), சுந்தராபுரத்தில் உள்ள பத்திரிகை அலுவலகம் ஆகியவற்றுக்கு திங்கள்கிழமை காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த மிரட்டல் சோதனையில் புரளி எனத் தெரியவந்தது.
இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த மின்னஞ்சலில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.10 மணியளவில் குண்டு வெடிக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு போலீஸாா் மெட்டல் டிடெக்டா் கருவி மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினா். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் இதுவும் புரளி எனத் தெரியவந்தது.
இதேபோல, கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள அக்ரானி கடற்படை கணக்குப் பிரிவு அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அங்கும் நடத்தப்பட்ட சோதனையில் அதுவும் புரளி எனத் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.