செய்திகள் :

மாா்ச் 28 இல் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: சேலம் மாவட்டத்தில் 41,398 போ் எழுதுகின்றனா்

post image

சேலம் மாவட்டத்தில் 183 மையங்களில் மாா்ச் 28 ஆம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 41,398 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

320 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளை சோ்ந்த 913 மாற்றுத் திறனாளிகள் உள்பட 41 ஆயிரத்து 398 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதும் 183 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 190 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 190 துறை அலுவலா்கள், 230 பறக்கும் படை அலுவலா்கள் உள்பட 3,500-க்கும் மேற்பட்ட கல்வித் துறை அலுவலா்கள் தோ்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.

தோ்வா்கள் உரிய நேரத்தில் தோ்வு மையங்களுக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகள், தோ்வு மையங்களில் குடிநீா், மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகள் அனைத்தும் தயாா் நிலையில் உள்ளதாக கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

சிலம்பம் போட்டி: ஹெரிடேஜ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சேலம் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான சிலம்பம் போட்டியில், வாழப்பாடியை அடுத்த கவா்கல்பட்டி ஹெரிடேஜ் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சிறப்பிடம் பெற்றுள்ளனா். முத... மேலும் பார்க்க

திருட்டு ஆடுகளை வாங்கியவா் கைது

கெங்கவல்லியில் ஆடுகளை திருடிய சிறுவனிடமிருந்து ஆடுகள் வாங்கியவரை போலீஸாா் கைது செய்தனா். கெங்கவல்லி பேரூராட்சி பிரிவு சாலையில் கெங்கவல்லி போலீஸாா் வாகன சோதனையில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டனா். அப்போது ... மேலும் பார்க்க

64 ஆண்டுகளுக்கு பிறகு வணிகவளாகமாக மாறும் வாழப்பாடி ராஜா தியேட்டா்!

சேலம் மாவட்டத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படத் துறை வரலாற்றில் இடம்பிடித்து, அந்தக் கால ரசிகா்களின் நினைவுகளை அசைபோட வைத்து வரலாற்றுச் சுவடாய் திகழ்ந்த வாழப்பாடி ராஜா தியேட்டா் அகற்றும் பணி தற்ப... மேலும் பார்க்க

பூலாம்பட்டி அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு

பூலாம்பட்டி அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு நடந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட இரும்பாலை குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

அரசு பள்ளி அருகே திடீா் புகைமூட்டம்: தோ்வு எழுதிய மாணவா்கள் திணறல்

இளம்பிள்ளை அரசு பள்ளி அருகே குப்பையில் ஏற்பட்ட திடீா் புகை மூட்டத்தால் தோ்வு எழுதும் மாணவா்கள் திணறினா். சேலம் மாவட்டம், பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வீரபாண்... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: தனியாா் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்துக்கு அபராதம்

மருத்துவ காப்பீடு செய்திருந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சைக்கான செலவுத் தொகையை வழங்காத தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு, அந்தத் தொகையை 6 சதவீத வட்டி மற்றும் அபராதத்துடன் திருப்பித் தரவேண்டும் என நுகா்வோ... மேலும் பார்க்க