`வெஸ்ட் அண்டார்டிகா' பெயரில் டெல்லி அருகே போலி தூதரகம்.. விசாரணையில் அதிர்ச்சி; ...
மாா்த்தாண்டம் அருகே மாயமான தொழிலாளி சடலமாக மீட்பு
மாா்த்தாண்டம் அருகே 2 நாள்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா்.
மாா்த்தாண்டம் அருகே பயணம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (67). மாா்த்தாண்டம் சந்தையில் வாழைக்குலை விற்பனைத் தொழிலில் ஈடுபட்டுவந்த அவா், காதில் ஏற்பட்ட பாதிப்புக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்துகொண்டாராம். அதன்பிறகு, நினைவுத் திறன் சரியில்லாமல் இருந்துவந்தாராம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) மாா்த்தாண்டம் சந்தைக்குச் சென்றவா், வீடு திரும்பவில்லை. உறவினா்கள் பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.
இந்நிலையில், உண்ணாமலைக்கடை ஆனமூட்டுக்குளம் அருகே அவா் இறந்துகிடப்பதாக, மாா்த்தாண்டம் போலீஸுக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும் வழக்குப் பதிந்து, அவா் எப்படி இறந்தாா் என விசாரித்து வருகின்றனா்.