செய்திகள் :

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூகுள் பிக்சல் 10: அறிமுக தேதி அறிவிப்பு

post image

கூகுள் நிறுவனம் பிக்சல் 10 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 10 வரிசை ஸ்மார்ட்போன்கள் ஏராளமான செய்யறிவு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

இதனிடையே பிக்சல் 10 சிறப்பம்சங்கள், விலை, எப்போது வெளியாகும் என்பத் உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போனை ஆக. 20-ல் நடக்கும் தனது அதிகாரப்பூர்வ கூகுள் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி நியூ யார்க்கில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பிக்சல் 10 ஸ்மார்ட்போன் வரிசைகள், பிக்சல் ஸ்மார்ட்வாட்ச் போன்றவற்றை அறிமுகம் செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சி, இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு நடைபெறும் என கூகுள் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் அறிவித்துள்ளது.

முன்னதாக, அக்டோபர் மாதத்தில் பிக்சல் சீரிஸ் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முன்கூட்டியே அறிமுகமாகவுள்ளன.

சிறப்பம்சங்கள்

  • கூகுள் பிக்சல் 10 வரிசை ஸ்மார்ட்போன் 6.3 அங்குலத்தில் அமோலிட் திரையுடன் வருகிறது. பயன்படுத்துவதற்கு திரை சுமுகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் வழங்கப்பட்டுள்ளது.

  • டென்சோர் 5ஆம் தலைமுறை புராசஸர் கொண்டுள்ளது.

  • பின்புறம் 50MP முக்கிய கேமராவும் 13MP அல்ட்ரா வைட் கேமராவும், ஜூம் வசதிக்காக 11MP கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

  • செல்ஃபி பிரியர்களுக்காக முன்பக்கம் 11MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

  • 4700mAh திறன் கொண்ட பேட்டரியுடன் வேகமாக சார்ஜ் செய்யும் வகையில் 37W திறன் கொடுக்கப்பட்டுள்ளது. வையர் இல்லாமல் 15W வேகத்தில் சார்ஜ் செய்ய இயலும்.

  • 7 ஆண்டுகளுக்கு அப்டேட் செய்துகொள்ளும் வகையில் ஆன்டிராய்டு வழங்கப்பட்டுள்ளது.

  • தூசி, தண்ணீர் உட்புகுவதை தடுக்கும் வகையில் IP68 திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | கிரிப்டோ பணப் பரிமாற்ற நிறுவனம் முடக்கம்: வாடிக்கையாளர்கள் நிலை என்ன?

Google Confirms the Launch Date for Pixel 10 Series: Here’s What We Can Expect

ஏற்றத்தில் பங்குச்சந்தை! லாபமடைந்த வங்கிப் பங்குகள்!

வாரத்தின் முதல் நாளான இன்று(ஜூலை 21) பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,918.53 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 11.50 மணியளவ... மேலும் பார்க்க

தங்கம் விலை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்வு!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.73,440க்கு விற்பனையாகிறது.ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 உயர்ந்து ரூ.9,180க்கும், ஒரு சவரன் தங்கம... மேலும் பார்க்க

எச்டிஎஃப்சி நிகர லாபம் 1.31% சரிவு!

மும்பை: எச்டிஎஃப்சி வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஜூன் 2025 காலாண்டு முடிவில் 1.31 சதவிகிதமாக சரிந்து ரூ.16,258 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வங்கியானது ரூ.16,475 கோடி நிகர லாபம் ஈட்டி... மேலும் பார்க்க

2025-ல் மிகவும் பிரபலமான இருசக்கர வாகனங்கள்!

புதுதில்லி: 2025ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் வெறும் கவனத்தை ஈர்ப்பதை விட அதிகமான டெக் செயல்திறன் உள்ளடக்கியது. தினசரி பயன்பாடு, நீண்ட பயணங்கள் மற்றும் மாறிவரும் சாலை நிலைமைகளை எ... மேலும் பார்க்க

ஜூனில் வீழ்ச்சியடைந்த தங்கம் விற்பனை

தங்கத்தின் அதிக மற்றும் ஏற்ற இறக்கமான விலைகள் காரணமாக கடந்த ஜூன் மாதத்தில் அதன் விற்பனை 60 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இது, கரோனா நெருக்கடிக்குப் பிறகு தங்கம் விற்பனையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சரிவாகும... மேலும் பார்க்க

டெக் மஹிந்திரா வருவாய் ரூ.13,351 கோடியாக உயா்வு

முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திராவின் செயல்பாட்டு வருவாய் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) ரூ.13,351 கோடியாக அதிகரித்துள்ளது.இது குறித்து நிறுவனம் வ... மேலும் பார்க்க