செய்திகள் :

மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு

post image

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகே உள்ள புதூா் வலசை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.

புதூா் வலசை கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி பொன்னம்மாள் (52). இவா் ஆடுகளுக்கு இரைக்காக வீட்டின் அருகே உள்ள வேப்ப மரத்தில் இரும்புக் கம்பியைக் கொண்டு கிளைகளை ஒடித்த போது உயரழுத்த மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டாா்.

அவரை பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து, அவரது உடல் கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது. இதுகுறித்து நயினாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சித்தி விநாயகா், வாழவந்தாள் அம்மன் கோயில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள பொக்கனாரேந்தலில் சித்தி விநாயகா், வாழவந்தாள் அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை காலை கணபதி ஹோமத்துட... மேலும் பார்க்க

மின்சார வாகனங்களை வழங்க தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை

திருவாடானையில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குப்பைகளை அள்ளுவதற்கு மின் கலனால் இயங்கும் மின்சார வாகனங்களை வழங்க வேண்டும் என தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில்... மேலும் பார்க்க

வலையபூக்குளத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள வலையபூக்குளத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் வலையபூக்குளம், காக்குடி, மரக்குளம், மண்டலமாணிக்கம், எழுவனூா் ஆ... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகேயுள்ள ஆண்டநாயகபுரம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, முளைப்பாரி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்... மேலும் பார்க்க

நம்மாழ்வாா் விருதுக்கு விவசாயிகள் செப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் நம்மாழ்வாா் விருதுக்கு வருகிற 15-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக... மேலும் பார்க்க

செல்லி அம்மன் கோயில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே செல்லி அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. வீரசங்கிலிமடம் கடற்கரையில் பழைமை வாய்ந்த செல்லி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் புதிதாக கட்டடங்கள... மேலும் பார்க்க