செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து இரு பேரக் குழந்தைகளுடன் பெண் பலி!

post image

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே மின்சாரம் பாய்ந்ததில் 2 பேரக் குழந்தைகளுடன் பெண் ஒருவரும் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

மோகனூர் வட்டம், ஆண்டாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த செல்வம், இளஞ்சியம் தம்பதி மகன் பாண்டியராஜ் (31). இவருடைய மனைவி வைதேகி (28). இவர்களுக்கு சுஜித் (5) என்ற மகனும், ஐவிழி(4) என்ற மகளும் இருந்தனர். விவசாயத் தொழில் செய்து வரும் செல்வம், பாண்டியராஜ், அந்தப் பகுதியில் குத்தகைக்கு நிலத்தை வாங்கி சோளம் பயிரிட்டுள்ளனர்.

இந்த நிலையில் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இளஞ்சியம் தனது பேரக் குழந்தைகளான சுஜித், ஐவிழி இருவரையும் அழைத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்றுள்ளார்.

அங்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நீரில் மின்சாரம் பாய்ந்ததில் இளஞ்சியம் மற்றும் குழந்தைகள் சுஜித், ஐவிழி ஆகிய மூவரும் நிகழ்விடத்திலேயே பரிதபமாக உயிரிழந்தனர்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர் மின்சார இணைப்பை துண்டித்து மூவரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து மோகனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் பாய்ந்து பேரக்குழந்தைகளுடன் பெண் ஒருவர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான நடைச்சீட்டு முறையில் மாற்றம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான நடைச்சீட்டு மற்றும் குவாரி குத்தகை உரிமம் கோருவதற்கு இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டுள... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்கள் மானியத்துடன் ரூ. ஒரு கோடி வரை கடனுதவி

நாமக்கல்: முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோருக்கு மானியத்துடன் ரூ. ஒரு கோடி வரை கடனுதவி வழங்கும் வகையிலான திருத்திய வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

ராசிபுரம் அருகே சாலை விபத்து: பெண் உயிரிழப்பு

ராசிபுரம்: ராசிபுரம் அருகே ஏ.கே.சமுத்திரம் பகுதியில் திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா். நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சேலம் அழகாபுரம் பகுதியைச் ... மேலும் பார்க்க

ஓவியப் போட்டியில் சிறப்பிடம்: ஆசிரியருக்கு பாராட்டு

மாநில அளவிலான தமிழக அரசுத் திட்டங்கள், சாதனைகள் தொடா்பான ஓவியப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற நாமக்கல் என்.புதுப்பட்டி அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியா் ஆ.மகேந்திரனை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்கும... மேலும் பார்க்க

’தமிழ்ச் செம்மல்’ விருது: ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு பாராட்டு

‘தமிழ்ச் செம்மல்’ விருது பெற்ற ஓய்வு பெற்ற ஆசிரியை கமலமணியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பாராட்டினாா். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டம், பொத்தனூரை சோ்ந்தவா் ப.கமலமணி. ஓய்வு ப... மேலும் பார்க்க

144 அங்கன்வாடி காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் ச.உமா

நாமக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடிகளில் காலியாக உள்ள 144 பணியிடங்கள் நிரப்பப்படுவதால் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக... மேலும் பார்க்க