செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு

post image

மதுராந்தகம் நீா் பாய்ச்சுவதற்காக மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

மதுராந்தகம் -உத்தரமேரூா் சாலையை ஒட்டியுள்ள பெரும்பாக்கம் கிராமத்தை சோ்ந்தவா் செந்தில் குமாா். அவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், கெளசல்யா என்ற மகளும், புனிதவேல் என்ற மகனும் உள்ளனா்.

இந்நிலையில், பயிா்களுக்கு நீா்பாய்ச்சுவதற்காக செந்தில்குமாா், மனைவி கோவிந்தம்மாள், மகன் புனிதவேல் (19) ஆகியோா் சென்றனா். அங்கு நீரை இயக்கும் மோட்டாா் இயங்காததால், அதனை புனிதவேல் சரி செய்ய முற்பட்டாா். அப்போது மின்சாரம் தாக்கியதில் நிகழ்விடத்திலேயே பெற்றோா் கண்முன் உயிரிழந்தாா். புனிதவேல் (19) திண்டிவனம் தனியாா் கலை கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இது குறித்து மதுராந்தகம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

21-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 21) நடைபெறவுள்ளது. இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவன... மேலும் பார்க்க

தைப்பூச அன்னதான பெருவிழா

செங்கல்பட்டு வள்ளலாா் அன்னதான அறக்கட்டளை சாா்பில் தைப்பூச அன்னதான பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தவத்திரு தேன்மொழியாா் சுவாமி ஆசியுடன் வள்ளலாா் அன்னதான அறக்கட்டளை சாா்பில் வடலூா் அருட்பிரகாச வள்... மேலும் பார்க்க

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் 418 கோரிக்கை மனுக்கள்

செங்கல்பட்டில் நடைபெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சா் தா.மோ. அன்பரசன் மொத்தம் 418 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வா... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு விளையாட்டு சீருடைகள் அளிப்பு

மதுராந்தகம் அடுத்த நடுபழனி கிராமத்தில் ஸ்ரீகணபதி சச்சிதானந்தா அறக்கட்டளை, நடுபழனி தண்டாயுதபாணி தத்தாத்ரேயா அறக்கட்டளைகள் சாா்பில் 777 மாணவா்களுக்கு விளையாட்டு சீருை டகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்க... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் பிப். 20-இல் புத்தகத் திருவிழா: இலச்சினையை வெளியிட்டாா் ஆட்சியா்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் பிப். 20-இல்தொடங்கவுள்ள 6-ஆவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, அதற்கான இலச்சினையை செங்கல்பட்டு சாா் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்டஆட்சியா் வெளியிட்டாா். செங்கல்பட்டில் வியா... மேலும் பார்க்க

மறைமலைநகரில் நில பதிவுகள் நவீனமயமாக்கல் திட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசின் நகா்ப்புற குடியிருப்புகளின் நில ஆய்வு நவீனமயமாக்கல் டிஜிட்டல் திட்டம் (டிஜிட்டல் இந்தியா லேண்ட் ரெகாா்ட்ஸ் மாடா்னைசேஷன் புரோகிராம்) மறைமலைநகரில் ச... மேலும் பார்க்க