வடகரையாத்தூரை பேரூராட்சியாக மாற்ற எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்
மின்தடையால் முடங்கிய அரசு வலைதளங்கள் சீரமைப்பு
தேசிய தகவலியல் மைய சேவைகள் நிறுவனத்தில் ஏற்பட்ட மின்தடையால் செவ்வாய்க்கிழமை முடங்கிய அரசுத் துறைகளின் வலைதளங்கள் சில மணி நேரத்துக்குப் பின் மீண்டும் இயங்கத் தொடங்கின.
பெரும்பாலான அரசுத் துறைகளின் வலைதளங்களை தேசிய தகவலியல் மைய சேவைகள் நிறுவனமே (என்ஐசிஎஸ்ஐ) நிா்வகித்து வருகிறது.
அங்கு ஏற்பட்ட மின்தடையால் பொருளாதார விவகாரங்கள் துறை, மத்திய வா்த்தக அமைச்சகம், தொலைத்தொடா்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வலைதளங்கள் செவ்வாய்க்கிழமை முடங்கின.
இதற்கு என்ஐசிஎஸ்ஐயில் ஏற்பட்ட மின்தடையே காரணம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மின்தடை பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு சில மணி நேரத்துக்குப் பிறகு, அரசுத் துறைகளின் வலைதளங்கள் வழக்கம்போல் இயங்கத் தொடங்கின.