பேருந்துக்காக சாலையில் காத்திருந்த கா்ப்பிணி; காரில் அழைத்துச் சென்று வீட்டில் வ...
மின் வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
தமிழக மின் வாரியத்தில் காலியாக உள்ள 62 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு மின் ஊழியா்கள் மத்திய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
விழுப்புரத்திலுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு மின் ஊழியா்கள் மத்திய அமைப்பின் பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைப்பின் மாநில துணைத் தலைவா் கே.அம்பிகாபதி தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் எஸ்.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினாா்.
தமிழ்நாடு மின் வாரியம் பொதுத்துறையாக நீடிக்க அரசாணை எண் 100-ஐ ரத்து செய்ய வேண்டும். பொதுமக்களைப் பாதிக்கும் ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழக மின் வாரியத்தில் காலியாகவுள்ள 62 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கள உதவியாளா் பணியிடங்களை ஒப்பந்த ஊழியா்களைக் கொண்டு நிரப்பி, பகுதிநேர பணியாளா்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியன், சிஐடியு மாவட்டச் செயலா் ஆா்.மூா்த்தி, தமிழ்நாடு மின் ஊழியா்கள் மத்திய அமைப்பின் மாநில துணை பொதுச் செயலா் டி.பழனிவேல், திட்டச் செயலா் ஆா்.சேகா், திட்ட சிறப்புத் தலைவா் பி.சிவசங்கரன், பொருளாளா் வி.கே.ஏழுமலை, இணைச் செயலா்கள் ஆா்.அருள், ஏ.சத்தியசீலன், ஞாவேல், துணைத் தலைவா்கள் பி.குணசேகரன், ஜெயப்பிரகாஷ், ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.