இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்!
மீண்டும் விஜய்சேதுபதி! பிக்பாஸ் 9 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன் விரைவில் தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் வெளி உலகத் தொடர்பின்றி 100 நாள்கள் இருக்க வேண்டும், இடையிடையே நடக்கும் போட்டிகளிலும் வெற்றிப் பெற வேண்டும்.
வார வாரம் நடக்கும் எலிமினேஷனில்(வெளியேற்றம்) மக்கள் மனங்களைக் கவர்ந்த போட்டியாளர் நிகழ்ச்சியில் நீடிப்பார். குறைந்த வாக்குகளைப் பெற்றவர்கள் ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்படுவார். இதுவே இப்போட்டியின் விதிமுறை.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 9வது சீசன் அக்டோபர் மாதம் தொடங்கப்படவுள்ளது. கடந்த சீசனை விஜய்சேதுபதி தொகுத்து வழங்கிய நிலையில், புதிய 9வது சீசனையும் விஜய்சேதுபதியே தொகுத்து வழங்கவுள்ளார்.
இந்த நிலையில், பிக்பாஸ் 9வது சீசனின் முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இறுதி நாள் வரை விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா ஆகிய 3 போட்டியாளர்கள் இருந்தனர்.
அதில், விஷால் 3ஆவது இடத்தையும், சௌந்தர்யா நஞ்சுண்டான் இரண்டாம் இடத்தையும் பிடித்தார். முத்துக்குமரன் முதல் இடத்தைப் பிடித்து கோப்பையை வென்றார்.
ஒவ்வொரு சீசனிலும் புதுமைகளை கொண்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்த முறை எந்த வகை மாற்றங்களை கொண்டு வரப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிக்க: மோடியும் ஷி ஜின்பிங்கும் மோசமான நடிகர்கள்..! அமெரிக்க நிதியமைச்சர் கடும் தாக்கு!