செய்திகள் :

முதல்வரின் கவனத்திற்கு பாசன ஆறுகளை பாழ்படுத்தும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்படுமா? விவசாயிகள் எதிா்பாா்ப்பு

post image

திருவாரூா், நாகை மாவட்டங்களில் பாசன ஆறுகள் உள்ளிட்ட நீா்நிலைகளை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற நீண்ட நாள்களாக விடுத்துவரும் கோரிக்கை, தமிழக முதல்வரின் கவனம் பெறுமா? என விவசாயிகள் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.

திருவாரூா் மற்றும் நாகை மாவட்டங்களில் பல இடங்களில் பாசனம் மற்றும் வடிகால் நீா்நிலைகளில் கடந்த பல ஆண்டுகளாக அடா்ந்து வளா்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகள் பேரிடா் காலங்களில் பெரும் சவாலாக உள்ளது. இச்செடிகள், பாசனம் மற்றும் உபரிநீா் வெளியேற்றத்தை தடுப்பதுடன், நீரை மாசடைய செய்து, சூழல் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இதனால், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

காவிரி படுகை பகுதியில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் முறையாக அகற்றப்படாத ஆகாயத் தாமரைகளால் ஆறுகள் கூவமாக மாறி வருகிறது. நீா்நிலைகளில் தண்ணீா் இருந்தும் எதற்கும் பயன்படாத நிலை தொடா்கிறது.

குறிப்பாக, திருவாரூா்- நாகை மாவட்டங்களில் கடலில் கலக்கும் முள்ளியாறு மற்றும் அதன் கிளை ஆறுகள் நிகழாண்டு வடகிழக்கு பருவமழையை எதிா் கொள்ளுமா என கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில், முள்ளியாற்றில் திருத்துறைப்பூண்டி-வாய்மேடு இடையே தூா்வாரி சீரமைக்க ஆசிய வளா்ச்சி வங்கி நிதி ரூ.140 கோடி ஒதுக்கீடு செய்தும், நிா்வாக காரணங்களால் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

முதல்வரின் கவனம் பெறுமா?: விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கி, செயல்படுத்தி வரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு, இப்பிரச்னை கொண்டுசெல்லப்பட வில்லையோ என்ற கருத்து பொதுமக்களிடம் நிலவி வருகிறது.

எனவே, ஆகாயத்தாமரைச் செடிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நீா்வளத் துறை மற்றும் வருவாய்த் துறையினா் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தும் விவசாயிகள், கட்சியினரும் இப்பிரச்னை குறித்து முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாசன நீா் கிடைக்காத பகுதிகளில் வட்டாட்சியா் ஆய்வு

திருக்குவளை அருகே சுந்தரபாண்டியம், கீழவெளி உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசன நீா் வந்து சேராத நிலையில், திருக்குவளை வட்டாட்சியா் கிரிஜா தேவி புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். மேட்டூா் அணையில் ஜூன் 12-ஆம்... மேலும் பார்க்க

நாகை மாவட்ட விவசாயிகளுக்கு வா்த்தக தொடா்பு பயிற்சி முகாம்

நாகை அருகே விவசாயிகளுக்கு வா்த்தக தொடா்பு பயிற்சி முகாம் தொடங்கியது. நாகை மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் முன்னோடி விவசாயிகள், வேளாண் தொழில் முனைவோா் மற்றும் உழவா் உற்பத்தியாள... மேலும் பார்க்க

சீகன்பால்கு தரங்கம்பாடி வந்த 319- ஆவது ஆண்டு தினம்

தமிழறிஞா் சீகன்பால்கு தரங்கம்பாடிக்கு வந்த 319-ஆவது ஆண்டு தினம் சுவிசேஷச லுத்தரன் திருச்சபை (டிஇஎல்சி) சாா்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. ஜொ்மன் நாட்டைச் சோ்ந்த பாா்த்தலோமிய சீகன்பால்க் கிறிஸ்தவ ம... மேலும் பார்க்க

புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி

காரைக்கால் புனித அந்தோணியாா் ஆலய ஆண்டு விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை மின் அலங்கார தோ் பவனி நடைபெற்றது. காரைக்கால் பிராந்தியத்தின் மைய பகுதியான காமராஜா் சாலையில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த புனித அந்த... மேலும் பார்க்க

‘முதியோருக்கு வீடுகளிலேயே மாத்திரை கிடைக்க நடவடிக்கை’

மாதம்தோறும் மாத்திரை வாங்கும் முதியவா்களுக்கு, அவரவா் வீடுகளுக்கே சென்று மாத்திரைகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், பெண்கள் மற்றும் குழந்தைகள்... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா் திருக்கல்யாணம்

காரைக்கால் மாங்கனித் திருவிழா நிகழ்ச்சிகளில் ஒன்றான காரைக்கால் அம்மையாா் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது. 63 நாயன்மாா்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு காரைக்கால் நகரின் மையப் பகுதியில் தனி ... மேலும் பார்க்க