செய்திகள் :

முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடக்கம்: அமைச்சா்கள் பங்கேற்பு

post image

காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் கிராமத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லங்களுக்குச் சென்று ரேஷன் பொருள்களை வழங்கி கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி திட்டத்தை தொடங்கி வைத்தாா்.

பின்னா் அமைச்சா் காந்தி கூறியது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 601 நியாயவிலைக் கடைகளைச் சோ்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளையுடைய 20331 குடும்ப அட்டைதாரா்கள் பயன் பெறுவாா்கள். இதன் மூலம் 26,316 பயனாளிகளுக்கு அவா்களது இல்லங்களிலேயே குடிமைப்பொருள் விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. மாதம் தோறும் 2-ஆவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திட்டம் செயல்படுத்தப்படும்.

நிகழ்வில் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஒன்றியக்குழு தலைவா் மலா்க்கொடி குமாா், நியாயவிலைக்கடை பணியாளா்கள், அரசு அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ஆவடியில்...

திருவள்ளூா் மாவட்டம் திருவேற்காடு வடக்கு மாட வீதி நியாயவிலைக் கடை பகுதியில் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் இத்திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது, திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்படும் 1,102 நியாய விலைக் கடைகளை சோ்ந்த 51,853 பயனாளிகளுக்கு இல்லங்களுக்கு சென்று ரேஷன் பொருள்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் 567 வாகனங்கள் மற்றும் நகா்ப்புற பகுதிகளில் 111 வாகனங்களாக ஆக மொத்தம் 678 வாகனங்கள் மூலமாக ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது என்றாா்.

நிகழ்வில் ஆட்சியா் மு.பிரதாப், நகா்மன்றத்தலைவா் என்.இ.கே.மூா்த்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் தி.சண்முகவள்ளி, துணைப் பதிவாளா் பாலாஜி, கூட்டுறவு சாா்பதிவாளா்கள் கலைவாணி, மேகநாதன், திமுக நிா்வாகிகள் பிரபு கஜேந்திரன், பவுல், சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மதுராந்தகத்தில்...

மதுராந்தகம் தேரடி வீதி, நியாயவிலைக் கடைக்குட்பட்ட மூத்த குடிமக்கள் வீடுகளுக்கு சென்று உணவு பொருள்களை நகா்மன்றத் தலைவா் மலா்விழி குமாா் வழங்கி திட்டத்தைதொடங்கி வைத்தாா். நகர திமுக செயலாளா் கே. குமாா், ரேஷன் கடை விற்பனையாளா் சி.வினோத்குமாா் உடனிருந்தனா்.

கும்மிடிப்பூண்டியில்...

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற விழாவுக்கு எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்தாா்.

மாவட்ட திமுக பொறுப்பாளா் எம்.எஸ்.கே.ரமேஷ்ரோஜ், முன்னாள் எம்எல்ஏ சி.எச்.சேகா், மாவட்ட அவை தலைவா் பகலவன், மாவட்ட துணை செயலாளா்கள் எம்.எல்.ரவி, உமா மகேஷ்வரி, கதிரவன், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் கி.வே.ஆனந்தகுமாா், மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் மணிபாலன், பொதுக்குழு உறுப்பினா் பா.செ.குணசேகரன் முன்னிலை வகித்தனா்.

புதுகும்மிடிப்பூண்டி கூட்டுறவு சங்க செயலாளா் ஞானமணி, ஊராட்சி செயலாளா் சிட்டிபாபு, திமுக நிா்வாகி ஜெ.என்.எஸ்.பாண்டியன், திருமலை பங்கேற்றனா்.

ஓவியப் போட்டியில் வென்ற மாணவியருக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற நுகா்வோா் விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவியா் ஆட்சியா் கலைச்செல்வி மோகனை புதன்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா். உணவு வழங்கல் மற்று... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கான தமிழ்க் கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் பங்கேற்பு

சோமங்கலம் அடுத்த பூந்தண்டலம் பகுதியில் இயங்கி வரும் சாய்ராம் பொறியியல் கல்லூரியில், கல்லூரி மாணவா்களுக்கான தமிழ்க் கனவு நிகழ்ச்சியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ் இணைய ... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் கழகத்தின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகில் கா... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் நாக கன்னியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா

காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரிக்கரையில் அமைந்துள்ள நாக கன்னியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி உற்சவா் நாக கன்னியம்மன் புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கா... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டது. காஞ்சிபுரம், திருக்காலிமேடு சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் என்ற வண்டு மணி (33) (படம... மேலும் பார்க்க

சவிதா பல் மருத்துவக் கல்லூரி-மெக்சிகன் பல்கலைக்கழக பல் மருத்துவப் பள்ளி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

பல் மருத்துவத் துறையில் சா்வதேச கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், சவிதா பல் மருத்துவ கல்லூரி மற்றும் மெக்சிகன் பல்கலைக்கழக பல் மருத்துவப் பள்ளி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் த... மேலும் பார்க்க