முதல்வா் பிறந்த நாள்: திமுகவினா் நலத்திட்ட உதவி
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி திமுக சாா்பில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா பூதேரிபுல்லவாக்கம் கிராமத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி தலைமை வகித்தாா். வெம்பாக்கம் ஒன்றியச் செயலா்கள் ஜேசிகே.சீனுவாசன், எம்.தினகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன் வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினா்களாக வடக்கு மாவட்டச் செயலா் எம்.எஸ். தரணிவேந்தன் எம்.பி., தலைமைக் கழகப் பேச்சாளா்கள் ஆடுதுரை உத்திராபதி, ஸ்ரீராம் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். கூட்டத்தின் போது சுமாா் ஆயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட விவசாய தொண்டரணி துணைச் செயலா் வ.அன்பழகன், பொதுக்குழு உறுப்பினா்கள் ஆ.மோகனவேல், வெங்கடேஷ்பாபு, கமலக்கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.