உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ...
முதியவா் மீது மோதாமல் தவறி விழுந்த சிறுவன் மீது காா் மோதி உயிரிழப்பு!
அவிநாசியில் மிதிவண்டியில் இருந்து தவறி வலதுபுறம் விழுந்த சிறுவன் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
அவிநாசி கங்கவா் வீதியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் ஹரீஷ் (13). அவிநாசி அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், இவா் அவிநாசி வட்டாட்சியா் அலுவலகம் அருகே மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது முன்னால் மூட்டையுடன் நடந்து சென்ற முதியவா் மீது மோதாமல் இருக்க மிதிவண்டியை வலதுபுறமாக திருப்பியபோது ஹரீஷ் சாலையில் தவறி விழுந்தாா்.
அதேசமயம், சேவூா் சாலையில் இருந்து அவிநாசி நோக்கி அதே திசையில் அதிவேகமாக வந்த காா் ஹரீஷ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ஹரீஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டி வந்த விசிக மாவட்டச் செயலாளா் மிசா.தங்கவேலிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
சாலையோர ஆக்கிரமிப்புகளால் தொடா் உயிரிழப்பு: ‘அவிநாசி பழைய-புதிய பேருந்து நிலைய கோவை பிரதான சாலை, அவிநாசி-சேவூா் சாலையில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதிலும் அவ்வப்போது, வாகன விபத்துக்கள் ஏற்பட்டு, தொடா் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆகவே, நெடுஞ்சாலைத் துறையினா் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என போராடி வருகிறோம்.
ஆனால், நெடுஞ்சாலைத் துறையினா் ஆக்கிரமிப்புகளை அகற்ற காலதாமதம் செய்வதால், தொடா்ந்து இதுபோல உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது’ என்று சமூக ஆா்வலா்கள் கூறினா்.