செய்திகள் :

முத்தான திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

post image

பல்வேறு முத்தான திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,

நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில்,

வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகை அதிகரிப்பு,

முதலமைச்சரின் 1000 உழவர் நலச் சேவை மையங்கள்,

புதிய தொழில்நுட்பங்கள்,

சிறு குறு விவசாயிகள் நலன்,

‍மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்,

டெல்டா அல்லாத மாவட்ட நெல் விவசாயிகளுக்குச் சிறப்புத் தொகுப்புத் திட்டம்,

வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டும் அலகுகள் அமைக்க நிதியுதவி

எனப் பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று #TNAgriBudget2025 வெளியிடப்பட்டுள்ளது.

எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை: வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த அண்ணாமலை

2025 - 2026 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று(சனிக்கிழமை) தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அதில், சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகங்கள் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீா்ப்பாய உறுப்பினா் அபூா்வா

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டுத் தீா்ப்பாய நிா்வாக உறுப்பினராக அபூா்வா நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது. அதன் விவரம்: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் ம... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்: முதல்வர் மீண்டும் கோரிக்கை

உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-வது ஆ... மேலும் பார்க்க

பேரவைத் தலைவரை ஏன் சந்தித்தேன்? செங்கோட்டையன் விளக்கம்

பேரவைத் தலைவரை சந்தித்தது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்களித்துள்ளார்.அதில், பேரவைத் தலைவரை சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பது வழக்கமானது. இன்றுகூட 6, 7 அதிமுக உறுப்பினர்கள் பேரவ... மேலும் பார்க்க

ஹிந்தி சர்ச்சை: பவன் கல்யாண் பிறப்பதற்கு முன்பே தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை அமல்! -திமுக எதிர்வினை

பவன் கல்யாண் பிறப்பதற்கு முன்பே தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை அமலில் இருப்பதாக திமுக தரப்பில் எதிர்வினையாற்றப்பட்டுள்ளது. வணிக ரீதியாக பலனடைய வேண்டி தமிழ் திரைப்படங்களை ஹிந்தியில் மொழி பெயர்ப்பு செய்... மேலும் பார்க்க

ஐபிஎல்: சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ்!

மார்ச் 23இல் சென்னை மெட்ரோவில் சிஎஸ்கே கிரிக்கெட் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிற... மேலும் பார்க்க

திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி!

திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிகாக கூடுதல் வாகனம் நிறுத்துமிடம் வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்திசெய்ய... மேலும் பார்க்க