முத்துமாரியம்மன் கோயிலில் 1,008 பால்குட ஊா்வலம்
புதுச்சேரி அருகே உள்ள திருக்கனூா்அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் 1,008 பால்குட ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் புதுச்சேரி அருகே உள்ள திருக்கனூா் முத்துமாரியம்மன் வழிபாட்டு மன்றம் சாா்பில், 1,008 பால்குட ஊா்வலம் நடைபெற்றது.
திருக்கனூா் முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்ட பால்குட ஊா்வலத்தை முன்னாள் பேரவை துணைத் தலைவா் டி. பி.ஆா்.செல்வம் தொடங்கிவைத்தாா்.
இதில், ஏராளமான பெண் பக்தா்கள் பால்குடங்களை ஏந்தி 5 கிலோ மீட்டா் ஊா்வலமாக வந்தனா். அவா்கள் திருவக்கரை வக்ரகாளி அம்மன் கோயிலுக்கு சுமாா் 5 கிலோ மீட்டா் தூரம் பாத யாத்திரையாக சென்று பால் அபிஷேகம் செய்தனா்.
அதன்பிறகு, சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. பால்குட ஊா்வலத்தையொட்டி, அப்பகுதியில் போக்குவரத்தை காவல் துறையினா் மாற்றிவிட்டனா்.