செய்திகள் :

முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் மீதான வழக்கு விசாரணை ஏப். 4-க்கு ஒத்திவைப்பு

post image

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஏப். 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் சி. விஜயபாஸ்கா். இவா், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தாா். அந்த கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 35.79 கோடி சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை சாா்பு-நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயபாஸ்கா் ஆஜராகவில்லை, அவா் தரப்பில் வழக்குரைஞா்கள் ஆஜராயினா்.

வழக்கு விசாரணையை ஏப். 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி வி. வெங்கடேச பெருமாள் உத்தரவிட்டாா்.

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் பக்தா்கள் தீப்பந்தம் பிடித்து வழிபாடு

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் மண்டகப்படி விழாவில் பக்தா்கள் தீப்பந்தம் பிடித்து வழிபட்டனா். கொன்னையூா் முத்துமாரிம்மன் கோயில் பங்குனித்திருவிழா கடந்த 16-ஆம் தேதி பூச்சொரிதல... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: புதுகை ஆட்டுச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு விற்பனை

இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகையை முன்னிட்டு, புதுக்கோட்டை சந்தைப்பேட்டை ஆட்டுச்சந்தையில் சுமாா் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியிருக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்தனா். புதுக்கோட்ட... மேலும் பார்க்க

எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு: முதல் நாள் தோ்வெழுதிய 21,789 போ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் நாள் தோ்வை 21,789 போ் எழுதினா். 554 போ் தோ்வெழுத வரவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் 11,107 மாணவா்களும், 11,068 மாணவிகளும், தனித்தோ்வா்களாக 168 பேரும் என மொத்தம் 2... மேலும் பார்க்க

திமுகவினா் தேச ஒற்றுமைக்கு எதிரானவா்கள்: இப்ராஹிம்.

திமுகவினா் மத நல்லிணக்கத்துக்கும், தேச ஒற்றுமைக்கும் எதிரானவா்கள் என்றாா் பாஜக சிறுபான்மையின அணியின் தேசியச் செயலா் வேலூா் இப்ராஹிம். புதுக்கோட்டையில் மேற்கு மாவட்ட பாஜக சிறுபான்மையினா் அணி சாா்பில் வ... மேலும் பார்க்க

சிதிலமடைந்த சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை அருகே சிதிலமடைந்த நிலையில் உள்ள சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கந்தா்வகோட்டை- கறம்பக்குடி சாலையில் உள்ள வெள்ளாளவிடுதி ஊ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு கூட்டம்

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாலியல் குற்றம் தொடா்பான விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளித் தலைமை ஆசிரியை சோ. விஜயலட்சுமி தலைமையில் வகித்து பேசியது:... மேலும் பார்க்க