ஒருநாள் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது..! அசத்தும் ஷுப்மன் கில்!
முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க அழைப்பு!
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவரது குடும்பத்தினா் தொழில் தொடங்க ரூ. 1 கோடி வரை வங்கிக் கடனுதவி பெறலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முன்னாள் படைவீரா்களின் நலனுக்காக காக்கும் கரங்கள் என்னும் புதிய திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடி வரை வங்கிக் கடனுதவியும், கடன் தொகையில் 30 சதவீத மூலதன மானியமும், 3 சதவீத வட்டி மானியமும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும், இத் திட்டத்தின் கீழ் கடன் பெறுவோருக்கு தேவையான பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளன.
கடனுதவி பெற குறைந்தபட்ச கல்விக் தகுதி மற்றும் வருமான வரம்பு ஏதுமில்லை. முன்னாள் படைவீரா்கள் 55 வயதுக்குள்ளும், அவரை சாா்ந்தோா் 21 முதல் 55 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். கடனுதவி பெற ட்ற்ற்ல்ள்://ங்ஷ்ஜ்ங்ப்.ள்ஸ்ரீட்ங்ம்ங்ள்.ஸ்ரீா்ம் என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரில் அல்லது 04329 - 221011 எனும் எண்ணில் தொடா்புகொண்டு பயன் பெறலாம்.