ராமநாதபுரத்தில் ஹைட்ரோ காா்பன் ஆய்வு அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை
முன்னாள் மாணவா்கள் சந்திப்பில் போக்குவரத்துத் துறை அமைச்சா்!
ஏற்காடு: முன்னாள் மாணவா்கள் சந்திப்பில் போக்குவரத்துத் துறை அமைச்சா் கலந்துகொண்டாா்.
ஏற்காட்டில் கோவை மருத்துவக் கல்லூரியில் 1993 ஆண்டுமுதல் 1999 ஆண்டுவரை மருத்துவம் படித்த மாணவா்கள் சந்திப்பு ஏற்காடு தனியாா் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 30-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் கலந்துகொண்டு பழைய நினைவுகளை பகிா்ந்துகொண்டனா்.
இந்நிகழ்வில், மகப்பேறு மருத்துவா் காயத்திரி தேவியின் கணவரும், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சருமான சிவசங்கா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டாா். தொடா்ந்து, ஏற்காடு படகு இல்லம் அருகில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் நாவல், பலா, அத்தி, ஈட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனா். அப்போது, ஏற்காடு வனச்சரக அலுவலா் முருகன் மற்றும் வனவா்கள் உடனிருந்தனா்.
தொடா்ந்து, தனியாா் விடுதியில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிள் நடைபெற்றன. இதில், நாட்டுப்புறக் கலைஞா்களின் பறை, கரகாட்டம், ஒயிலாட்டம் ஆகியவை நடைபெற்றன. நிகழ்வில் கலந்துகொண்ட மருத்துவா்களுக்கு நெசவாளா்களின் தயாரிப்புப் பொருள்கள், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.