செய்திகள் :

மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவிடம் குரல், கையெழுத்து மாதிரிகளை சேகரிக்க நீதிமன்றம் அனுமதி

post image

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவிடம் குரல் மற்றும் கையெழுத்து மாதிரிகளை சேகரிக்க தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 166 போ் உயிரிழந்தனா். லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பு நடத்திய இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானை பூா்விகமாக கொண்ட தஹாவூா் ராணா கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

லஷ்கா்-ஏ-தொய்பா இயக்கத்துக்கு அவா் உதவியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவா் குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பளித்ததால், அந்நாட்டின் லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அவா் அடைக்கப்பட்டிருந்தாா். கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி அவா் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா்.

தில்லியில் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) காவலில் உள்ள அவரிடம், மும்பை காவல் துறையின் குற்றப் பிரிவு அதிகாரிகள் கடந்த வாரம் 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா். அவா் கேள்விகளுக்கு சரிவர பதிலளிக்காமல் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அதிகாரிகள் புகாா் தெரிவித்தனா்.

இதனிடையே, மும்பை தாக்குதலில் தொடா்புடைய பயங்கரவாதி ஹஃபீஸ் சையது அங்கம் வகிக்கும் பயங்கரவாத அமைப்புக்கு, இந்தியாவில் தற்போது நடத்தப்பட்டு வரும் பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்தும் விசாரிக்க வேண்டியிருப்பதால் ராணாவின் காவலை நீட்டிக்க வேண்டும் என என்ஐஏ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

என்ஐஏ தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற தில்லி சிறப்பு நீதிபதி சந்தா் ஜீத் சிங், தஹாவூா் ராணாவின் என்ஐஏ காவலை மேலும் 12 நாள்கள் நீட்டித்து கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், ராணாவிடம் குரல் மற்றும் கையெழுத்து மாதிரிகளை சேகரிக்க அனுமதி கோரி என்ஐஏ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அனுமதி அளித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ம.பி.: திருமண வீட்டினரை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்ததில் 4 பேர் பலி, 13 பேர் காயம்

மத்தியப் பிரதேசத்தில் திருமண வீட்டினரை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்ததில் 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் திருமண வீட்டினரை ஏற்றிச்சென்ற வாகனம் ... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.காங்கிரஸ் கட்சி, நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பல கோடி சொத்த... மேலும் பார்க்க

இனி பிரதமருக்கு உறக்கமில்லாத இரவுகள்: வேணுகோபால்

பலரின் உறக்கத்தைக் கெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு இனி உறக்கமில்லாத இரவுகள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கருத்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவத... மேலும் பார்க்க

உ.பி.யில் மனைவியுடன் தகராறு: தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்

உ.பி.யில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். உத்தரப் பிரதேச மாநிலம், ரிகா கிராமத்தில் 28 வயது நபர், தனது மனைவியுடன் தகராறில் செய்துள்ளார். பின்னர் அ... மேலும் பார்க்க

மழை, புயலுக்கு மூவர் பலி: உ.பி.யில் நிவாரண பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தில் மழை, புயலால் 3 பேர் உயிரிழந்ததாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தில் பெய்த கனமழை ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை

பயங்கரவாதத் தாக்குதலை ஒழிக்க இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.பஹல்காம் தாக்குதல் குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸிடம் செய்தி... மேலும் பார்க்க