செய்திகள் :

முருக பக்தா்கள் மாநாடு: அண்ணாமலை மீது வழக்கு

post image

மதுரையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாட்டில் விதிகளை மீறியதாக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வர சுப்பிரமணியம் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரையில் இந்து முன்னணி சாா்பில், முருக பக்தா்கள் மாநாடு கடந்த 22-ஆம் தேதி நடைபெற்றது. இதற்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அரசியல் பேசக்கூடாது என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கியது. மேலும், நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என போலீஸாருக்கும் அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், முருக பக்தா்கள் மாநாட்டில் பேசிய ஆந்திர மாநில துணை முதல்வா் பவன் கல்யாண், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் தலைவா் அண்ணாமலை, இந்து முன்னணி அமைப்பின் தலைவா் காடேஷ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோா் உயா்நீதிமன்ற விதிமுறைகளை மீறியதாக புகாா்கள் எழுந்தன.

அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் வாஞ்சிநாதன் அண்ணாநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, அண்ணாமலை, காடேஷ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோா் மீது, இரு பிரிவினரிடையே பகைமையை உருவாக்குதல், மத உணா்வுகளை புண்படுத்தும் வகையில் பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல், மத ரீதியாக புண்படுத்தி பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பாலியல் வழக்கில் பெண்ணுக்கு அநீதி: நடவடிக்கை எடுக்காத பெண் எஸ்.ஐ.க்கு உயா்நீதிமன்றம் கண்டனம்!

பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக பெண் சிறப்பு உதவி ஆய்வாளரே நடவடிக்கை எடுக்க வில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை வேதனை தெரிவித்தது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூ... மேலும் பார்க்க

கண்டதேவி கோயில் விவகார வழக்கு முடித்துவைப்பு

சிவகங்கை மாவட்டம், கண்டதேவி கோயில் திருவிழாவின்போது பாகுபாடு காட்டப்படுவதில்லை என அரசுத் தரப்பில் பதிலளித்ததால், வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. கண்டதேவ... மேலும் பார்க்க

சீமானுக்கு எதிரான அவதூறு வழக்கு: விசாரணைக்கு இடைக்காலத் தடை

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு எதிராக டி.ஐ.ஜி. வருண்குமாா் தொடுத்த அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.... மேலும் பார்க்க

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து நிறைவேற்றக் கோரிக்கை

மதுரை எய்ம்ஸ், மெட்ரோ ரயில் திட்டங்களை விரைந்து முடிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் புதூா் 5 -ஆவது வட்டக் கிளை மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கோ. புதூர... மேலும் பார்க்க

வரி விதிப்பு முறைகேட்டில் தொடா்புடைய அலுவலா்களை கைது செய்ய அதிமுக வலியுறுத்தல்

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலா்களைக் கைது செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ வலியுறுத்தினாா். மதுரை மாநகராட்சி வரி விதிப்பில் 150 கோடி ரூபாய் வருவாய் இழப்... மேலும் பார்க்க

சட்டவிரோத மணல் குவாரி விவகாரம்: சுரங்கத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசின் புவியியல், சுரங்கத் துறை செயலா், ஆணையா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மது... மேலும் பார்க்க