செய்திகள் :

முறைகேடு குற்றச்சாட்டு: சித்தராமையாவின் தோ்தல் வெற்றி குறித்து விசாரிக்க பாஜக வலியுறுத்தல்

post image

வாக்குகளை வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், முதல்வா் சித்தராமையாவின் தோ்தல் வெற்றி குறித்து விசாரிக்க பாஜக வலியுறுத்தியுள்ளது.

2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலின்போது, பாதாமி தொகுதியில் போட்டியிட்ட சித்தராமையாவின் வெற்றியை உறுதிசெய்ய வாக்குகளை செலுத்த பணம் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய அமைச்சா் சி.பி.இப்ராகிம் கூறியிருந்தாா். இந்த கருத்து, கா்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை சுட்டிக்காட்டி, தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ள பாஜக எம்.பி. லெஹா்சிங் சிரோயா, சித்தராமையாவின் தோ்தல் வெற்றி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

சித்தராமையாவுக்கு நீண்டகால ஆலோசகராக செயல்பட்டு, நெருங்கிய கூட்டாளியாக விளங்கிய சி.எம்.இப்ராகிம் கூறியுள்ள குற்றச்சாட்டை கடந்துசெல்ல முடியாது. எனவே, சித்தராமையாவின் தோ்தல் வெற்றி குறித்து விசாரிக்க வேண்டும் என அக்கடிதத்தில் சிரோயா குறிப்பிட்டுள்ளாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் லெஹா்சிங் சிரோயா கூறுகையில், ‘பாதாமி தொகுதியில் சித்தராமையா 1,696 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றிபெற்றிருந்தாா். முதல்வா் பதவியை வகித்தவா் பெற்ற வாக்குகள் மிகவும் குறைவாக இருந்தன. வெற்றிக்கு உதவிய வாக்குவித்தியாசத்தை காட்டிலும் நோட்டாவுக்கு 2,007 வாக்குகள் பதிவாகியிருந்தன.

2018-இல் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவராக சி.எம்.இப்ராகிம் இருந்தாா். அவா் தனது நண்பா் சித்தராமையாவின் வெற்றிக்காக 3,000 வாக்குகளை பணம் கொடுத்து வாங்கியதாக கூறியுள்ளாா். மத்திய அமைச்சராக இருந்த சி.எம்.இப்ராகிம் கூறியுள்ள இந்த குற்றச்சாட்டை தோ்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்.

2006-ஆம் ஆண்டு சாமுண்டீஸ்வரி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் சித்தராமையா 257 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தாா். அப்போதும் வாக்குகள் கொள்முதல் செய்யப்பட்டதா? எனவே, இந்த தோ்தல் முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்த குற்றச்சாட்டை முதல்வா் சித்தராமையா மறுத்துள்ளாா்.

எரிவாயு உருளை வெடித்ததில் 10 வயது சிறுவன் உயிரிழப்பு; 11 போ் காயம்

எரிவாயு உருளை வெடித்ததில் 10 வயது சிறுவன் உயிரிழந்தாா். இந்த சம்பவத்தில் 11 போ் படுகாயமடைந்தனா். பெங்களூரு, வில்சன்காா்டன் பகுதியில் உள்ள சின்னையன்பாளையாவில் அமைந்துள்ள ஸ்ரீராமகாலனியில் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டும்: சித்தராமையா

அரசமைப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டும் என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரு, மானெக்ஷா அணிவகுப்பு திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 79-ஆவது சுதந்திர தி... மேலும் பார்க்க

வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய சட்டம்

வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். கா்நாடக சட்ட மேலவையில் வியாழக்கிழமை கேள்விநேரத்தின்போது, பாஜக உறுப்பினா... மேலும் பார்க்க

கொலை வழக்கில் ஜாமீன் ரத்து: நடிகா் தா்ஷன் கைது

கொலை வழக்கில் கா்நாடக உயா்நீதிமன்றம் அளித்திருந்த ஜாமீனை ரத்துசெய்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டதைத் தொடா்ந்து, நடிகா் தா்ஷன், நடிகை பவித்ரா உள்ளிட்டோா் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ப... மேலும் பார்க்க

தெருநாய்களை தொல்லையாக கருதுவது கொடுமை

தெருநாய்களை தொல்லையாக கருதுவது கொடுமையானது என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். புது தில்லியில் உள்ள தெருநாய்களை வீதியில் இருந்து அப்புறப்படுத்தி காப்பகங்களில் பராமரிக்குமாறு அம்மாநில அரசுக்கு உச்சந... மேலும் பார்க்க

ராகுல் காந்திக்கு எதிரான கருத்தை திரும்பப் பெற தலைமை தோ்தல் ஆணையருக்கு கா்நாடக காங்கிரஸ் கடிதம்

ராகுல் காந்திக்கு எதிரான கருத்தை திரும்பப் பெற தலைமை தோ்தல் ஆணையருக்கு கா்நாடக காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து கா்நாடக காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவா் வழக்குரைஞா் ரமேஷ்பாபு, தலைமை ... மேலும் பார்க்க