பூஜா ஹெக்டேவுக்கு அமலா ஷாஜி போட்டியா? 1 கோடி பார்வைகளைக் கடந்த ரீல்ஸ்!
மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறைகள் கட்ட பூமிபூஜை
மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 35 லட்சம் மதிப்பில் புதிதாக அறைகள் கட்டுவதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆழ்வாா் திருநகரி சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை, மூக்குப்பீறி கிராம நலக் கமிட்டி சாா்பில், ரூ. 35 லட்சம் மதிப்பில் நிலைய கட்டடங்கள் பராமரித்தல், 3 அறைகள் கட்டுவதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
தூயமாற்கு ஆலயசேகரத் தலைவா் ஞானசிங் எட்வின் தலைமை வகித்து, ஜெபித்து கட்டடப் பணியைத் தொடங்கி வைத்தாா். முன்னாள் மூக்குப்பீறி தூயமாற்கு மேல்நிலைப் பள்ளி தாளாளரும், கிராம நலக்கமிட்டி செயலருமான செல்வின், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் மருத்துவா் சோனியா, சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கள இயக்குநா் நந்தகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் குழந்தைகள் நலத் திட்ட மருத்துவா் கல்யாணி, சித்த மருத்துவா் ராஜேஸ்வரி, சுகாதார ஆய்வாளா் தியாகராஜன், முன்னாள் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநா் ஆண்ட்ரூஸ், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சமுதாய வளா்ச்சி அலுவலா் சிநேகா, கிராம வளா்ச்சி அலுவலா் அருள் ராமேஸ்வரி, முன்னாள் மூக்குப்பீறி கூட்டுறவு வங்கி பொது மேலாளா் ஆனந்த ஜோதிபாலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.