பசிபிக் கடலின் மிக ஆழத்தில் 4 கருப்பு முட்டைகள்.. உள்ளே இருந்த அதிசயம்!
மெத்தம்பெட்டமைன் விற்பனை: மருத்துவா் கைது
சென்னை அரும்பாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்ததாக மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை அரும்பாக்கம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்ாக கடந்த 30-ஆம் தேதி அந்தோணி, தீபக்ராஜ் உள்ளிட்ட 5 போ் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.
இவா்களிடம் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும், அரும்பாக்கம் போலீஸாரும் நடத்திய விசாரணையில், மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பனையில் விருகம்பாக்கம் சின்மயாநகரைச் சோ்ந்த மருத்துவா் ஈஸ்வா் (27) என்பவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஈஸ்வரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.