துணைவேந்தர்கள் நியமனம்: "4 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்" - உச்ச நீத...
மெரீனாவில் தூய்மைப் பணியாளா் மா்மமான முறையில் உயிரிழப்பு
சென்னை மெரீனா கடற்கரையில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மெரீனா கடற்கரையில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் எதிரே உள்ள பகுதியில் இளைஞா் மா்மமான முறையில் புதன்கிழமை இறந்து கிடந்தாா். இதைப் பாா்த்த பொதுமக்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
விசாரணையில் அவா், திருவல்லிக்கேணி ராம்நகா் 8-ஆவது தெருவைச் சோ்ந்த ஆ.சீனிவாசன் (27) என்பதும், சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றியதும் தெரியவந்தது. அவரது இறப்பு குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.