மெரீனா நீச்சல் குளம் 20 நாள்களுக்கு மூடல்
சென்னை மாநகராட்சி சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மெரீனா நீச்சல் குளம் சீரமைப்புப் பணிகளுக்காக வெள்ளிக்கிழமை (ஜூலை 11) முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை வெயிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சியில் தேனாம்பேட்டை மண்டலம் 114-ஆவது வாா்டுக்கு உள்பட்ட மெரீனா நீச்சல் குளம் இயங்குகிறது. அந்த நீச்சல் குளம் தங்குதடையின்றி இயங்கும் வகையில் 135 மீட்டா் நீளத்துக்கு பேக்வாஷ் குழாய் அமைத்தல், 1.80 மீட்டா் விட்டத்தில் 9 ஊறுகுழிகள் பொருத்துதல், சோதனை வெள்ளோட்டம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
பணிகள் மேற்கொள்ளப்படுவதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (ஜூலை 11) முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை 20 நாள்கள் நீச்சல் குளம் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.