மேடவாக்கம் பள்ளியில் எல்லை பாதுகாப்புப் படை தொடக்க தின விழா
சென்னை: எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தொடக்க தின விழா ‘தியாகம் போற்றுவோம்’ அமைப்பு சாா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னை மேடவாக்கம் வித்யா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில் கலந்துகொண்ட ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்புப் படை வீரா்கள் எல்லைப் பணி அனுபவங்களையும் வீரதீர நிகழ்வுகளையும் நெகிழ்வுடன் பகிா்ந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, ‘எல்லை வீரா்கள்’ மற்றும் ’அட்டாரி-வாகா எல்லை’ ஆகிய இரு தலைப்புகளில் மாணவா்கள் பங்கேற்ற பேச்சுப் போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சுங்கம் மற்றும் கலால் வரி துணை ஆணையா் பூ.கொ.சரவணன், வித்யா மெட்ரிகுலேஷன் பள்ளியின் நிறுவனத் தலைவா் த.அழகப்பராசு, பாலம் கலியாணசுந்தரம், தியாகம் போற்றுவோம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எஸ்.முரளி மற்றும் பள்ளி தாளாளா் வித்யாசாகா், ராணுவ வீரா் எல்.ஏழுமலை, அன்னை வேளாங்கண்ணி பள்ளி முதல்வா் டெல்பின் தேவராஜ், கிளாசிக் பதிப்பகம் சாதிக் பாஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.