செய்திகள் :

மேட்டுப்பாளையம் இரட்டை ஆணவக் கொலை; குற்றவாளிக்கு தூக்கு தண்டனை; கோவை நீதிமன்றம் அதிரடி

post image

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். இரண்டாவது மகன் கனகராஜ் மேட்டுப்பாளையத்தில் உள்ள உருளைக்கிழங்கு மார்கெட்டில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கனகராஜும் அதே பகுதியைச் சேர்ந்த வர்சினி பிரியா என்ற பெண்ணும் ஓராண்டுக்கு மேலாக காதலித்து வந்தனர்.

வர்சினி பிரியா கனகராஜ்

ஆனால் வர்சினி பிரியா பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

அவர்களுக்கு கனகராஜின் அப்பா கருப்பசாமி திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளார். சில நாள்கள் ஒன்றாக இருந்த நிலையில் கனகராஜின் சொந்த அண்ணன் வினோத்குமார் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 2019 ஜூன் மாதம் 28-ம் தேதி அவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு  சென்ற வினோத்,

வினோத் குமார்

சாதிய ரீதியாக தகாத வார்த்தைகளில் திட்டி கனகராஜ் மற்றும் வர்சினியை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார். இந்த இரட்டை ஆணவ படுகொலை சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இந்த வழக்கின் விசாரணை கோவை பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி மீதான வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த வாரம் நீதிபதி விவேகானந்தன், வினோத்குமார் தான் வழக்கின் முக்கிய குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கினார்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வினோத் குமார்

இந்நிலையில் இன்று அவருக்கான தண்டனை வழங்கப்பட்டது. அப்போது வினோத்குமாருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிபதி விவேகானந்தன் அதிரடி உத்தரவிட்டார். “இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு” என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் ப.பா. மோகன் வரவேற்றுள்ளார்.

PVR : 25 நிமிடங்கள் நீடித்த விளம்பரம்; பி.வி.ஆருக்கு ரூ.1,28,000 அபராதம் - நுகர்வோர் மன்றம் அதிரடி!

பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம், பி.வி.ஆர் சினிமாஸ் நிர்வாகம், சரியாக திரைப்படம் தொடங்கும் நேரத்தை டிக்கெட்டில் குறிப்பிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இப்போது பெரும்பாலான தியேட்டர்கள் பி.வி.ஆர் நிர்... மேலும் பார்க்க

விஜயலட்சுமி : `வழக்கை சாதாரணமாக முடித்து விட முடியாது' - சீமான் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், 12 வாரத்திற்குள் இந்த வழக்கில் ... மேலும் பார்க்க

நீதிபதிகள் நியமனம்: ``RSS பின்புலம் இருப்பவர்கள்தான்..'' -ஓய்வுபெற்ற நீதிபதிகள் கவலை!

உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதிகள் நியமனம் முறையாக நடபெறவில்லை என ஓய்வுபெற்ற நீதிபதிகள் சந்துரு, அரிபந்தாமன் ஆகியோர் வெளிப்படையாக குற்றம்சாட்டியிருக்கின்றனர். இது தொடர்பாக சென்னை... மேலும் பார்க்க

`மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்’ - தாது மணல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர் நீதிமன்றம் அதிரடி

கடற்கரைகளில் சட்டவிரோதமாக தாதுமணல் எடுத்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடற்கரைகளில் சட்ட விரோதமாக தாதுமணல் எடுத்து வருவதால் அரசுக்கு பல ... மேலும் பார்க்க

Odisha: ஒரே பத்ம ஶ்ரீ விருதுக்கு உரிமை கோரும் இரண்டு நபர்கள்; யார் உண்மையான அந்தர்யாமி மிஸ்ரா?

ஒரிசா உயர் நீதிமன்றம் ஒரு விசித்திரமான வழக்கை சந்தித்துள்ளது. 2023ம் ஆண்டு வழங்கப்பட்ட பத்ம ஶ்ரீ விருதை, இரண்டு நபர்கள் `எனது... எனது' என்று கருதுவதனால் இருவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. விருது யாரு... மேலும் பார்க்க

`மனைவி கணவரை தவிர்த்து வேறொருவர் மீது காதலும், நெருக்கமும் கொண்டிருப்பது தகாத உறவாகாது'- MP ஹைகோர்ட்

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகக் கூறி, அவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க முடியாது என்று கூறி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை குடும்ப... மேலும் பார்க்க