செய்திகள் :

மேட்டூர் அணை நீர்மட்டம் 2-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது!

post image

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமை(செப்.3) 120அடியாக நீடிக்கிறது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் இருந்து மேட்டூர் அணைக்கு அணைக்கு வினாடிக்கு 29,300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 28,500 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22500 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 6000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.

செப். 13-இல் பிரதமா் மோடி மணிப்பூா் பயணம்- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

The water level of Mettur Dam remained at 120 feet for the second consecutive day on Wednesday (September 3).

திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்துள்ள திருவலஞ்சுழியில் எழுந்தருளியுள்ள, அருள்மிகு ஸ்ரீகபர்தீஸ்வரர் திருக்கோயிலின் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோ... மேலும் பார்க்க

8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்த மோடி அரசை பாராட்டுகிறேன்: ப. சிதம்பரம்

மதுரை: 8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்து அத்தியாவசியப் பொருள்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை குறைத்துள்ள மோடி அரசை பாராட்டுகிறேன் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வியெழுப்... மேலும் பார்க்க

ஒரு நாடு, ஒரு வரி, ஒரு நாடு ஒன்பது வரிகளாக மாறியது எப்படி?: மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

புது தில்லி: சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக மத்திய பாஜக அரசை கடுமையாக சாடியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "ஒரு நாடு, ஒரு வரி" என்பதை "ஒரு நாடு, 9 வரிகள்" என்று மாற்றியுள்ளதாக வியாழக்கிழம... மேலும் பார்க்க

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை கிராம் ரூ.9,805-க்கும், பவுன் ரூ.78,440-க்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை கணிசமாக குறைந்துள்ளது. இந்திய பொருள்களின் மீதமான அமெரிக்க அரசின் 50 ... மேலும் பார்க்க

ரூ.19,000 கோடி நிதியை நிறுத்திய டிரம்ப் உத்தரவு ரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அமெரிக்காவில் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாக உத்தரவை ரத்து செய்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங... மேலும் பார்க்க

உள்கட்சி பூசல்களை களைய வேண்டும்: தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

தமிழ்நாடு பேரவைத் தேர்தலையொட்டி உள்கட்சி பூசல்களைக் களைய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்களுக்கு அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்த... மேலும் பார்க்க