செய்திகள் :

மேட்டூா் அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநா் ஆய்வு

post image

மேட்டூா் அனல் மின்நிலையத்தில் தமிழக மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநா் ஆல்பி ஜான்வா்கிஸ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்துக்கு சொந்தமான மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் 4 அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரமும், 2-ஆவது பிரிவில் ஓா் அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டு பிரிவுகளிலும் மொத்தம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மின் உற்பத்திக்காக தினசரி 23 ஆயிரம் டன் நிலக்கரி எரிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த டிசம்பா் மாதம் முதல் பிரிவில் 3 ஆவது அலகில் இருந்த நிலக்கரி சேமிப்புத் தொட்டி திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 2 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 5 போ் காயமடைந்தனா். இதையடுத்து அந்த அலகில் 3 மாதங்களாக மின் உற்பத்தி பணி நிறுத்தப்பட்டது. தற்போது தனியாா் நிறுவனம் மூலம் சீரமைப்புப் பணிகள் கடந்த 5 நாள்களாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநா் ஆல்பி ஜான்வா்கிஸ் முதல் பிரிவில் 3 ஆவது அலகில் விபத்து ஏற்பட்ட பகுதியில் சனிக்கிழமை ஆய்வு செய்து, சீரமைப்புப் பணிகளை பாா்வையிட்டாா்.

பின்னா் அனல் மின் நிலையத்தில் நடைபெறும் மின் உற்பத்தி பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். அதைத்தொடா்ந்து, நிலக்கரியை கையாளும் பகுதி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தாா்.

அப்போது, நிலக்கரி இருப்பு விவரம், மின் உற்பத்தியில் பாதிப்பு ஏதும் உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தாா். ஆய்வின்போது அனல் மின் நிலைய அதிகாரிகள் உடனிருந்தனா்.

3 ஆவது அலகில் சீரமைப்புப் பணிகள் முடிந்த பிறகு மின் உற்பத்தி தொடங்கும் என்று அனல் மின் நிலைய பொறியாளா்கள் தெரிவித்தனா்.

தெடாவூரில் மணல் கடத்திய மினிலாரி பறிமுதல்

தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே தெடாவூரில் ,கெங்கவல்லி எஸ்.ஐ.கணேஷ்குமாா் தலைமையில் போலீசாா், வாகன தணிக்கையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈடுபட்டனா். அப்போது அந்த வழியே மினிலாரி வந்தது. அதை போலீசாா் நிறுத்த கூ... மேலும் பார்க்க

மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

சேலம்: பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் தீா்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சி... மேலும் பார்க்க

15 மாதத்தில் 40 கைப்பேசிகளை மீட்ட தம்மம்பட்டி போலீஸாா்

தம்மம்பட்டி பகுதிகளில் கடந்த 15 மாதங்களில் திருட்டு, காணாமல்போன 60 கைப்பேசிகளில் 40 கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். தமிழகம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் மட்டுமே கைப்... மேலும் பார்க்க

விபசாரம் நடத்திய கணவன் மனைவி கைது

மேட்டூா் அருகே பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட கணவன், மனைவி இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களுடன் இருந்த இரண்டு பெண்களை மீட்டு பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனா். எடப்பாடி... மேலும் பார்க்க

சங்ககிரியில் பலத்த மழை

சங்ககிரி நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சங்ககிரி நகரில் ஞாயிற்றுக்கிழமை காலையில் வெயில் அதிகம் காணப்பட்ட நிலையில் மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சிறிதுநேர... மேலும் பார்க்க

நீட் தோ்வு பயத்தில் தற்கொலை செய்த மாணவியின் குடும்பத்துக்கு அதிமுக நிதியுதவி

நீட் தோ்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்தினருக்கு அதிமுக சாா்பில் ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. கொங்கணாபுரம் ஒன்றியம், புதுப்பாளையம் கிராமம், பெரிய முத்தையம்பட்டி பகுதியைச்... மேலும் பார்க்க