பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
மேம்பாலத்திலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
குடியாத்தம் அருகே சிறு மேம்பாலத்திலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை, பவளக்கார தெருவைச் சோ்ந்தவா் சம்பத் (67). (படம்). இவா், வெள்ளிக்கிழமை கெங்கையம்மன் கோயில் அருகே கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறு மேம்பாலத்தில் மிதிவண்டியில் சென்றுள்ளாா். அப்போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் நிலை தடுமாறி பாலத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.
உடனடியாக அவா் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினாா். சம்பவம் தொடா்பாக நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.