செய்திகள் :

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 25, 26-இல் மழைக்கு வாய்ப்பு!

post image

தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 25, 26 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் திங்கள்கிழமை (மாா்ச் 24) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. செவ்வாய், புதன் (மாா்ச் 25, 26) ஆகிய இரு நாள்கள் தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதர தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வட வானிலையே நிலவும்.

மேலும், தமிழகத்தில் பல இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை (மாா்ச் 24) அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் பெரியநாயக்கண்பாளையம், தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிகளில் தலா 50 மி.மீ. மழை பதிவானது.

ராஜபாளையம் (விருதுநகா்), ஊத்து (திருநெல்வேலி), கழுகுமலை (தூத்துக்குடி) - தலா 40 மி.மீ., பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி (திருநெல்வேலி), கேத்தி (நீலகிரி), ஒசூா் (கிருஷ்ணகிரி), ஊட்டி (நீலகிரி), அரண்மனைப்புதூா் (தேனி), நாலுமுக்கு, கன்னடயன் அணைக்கட்டு, காக்காச்சி, களக்காடு (திருநெல்வேலி) எட்டயபுரம், கோவில்பட்டி (தூத்துக்குடி) தலா 30 மீ.மி. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு புறநகா் மின்சார ரயில் மாா்ச் 28 வரை ரத்து

பராமரிப்புப் பணி காரணமாக சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையே நள்ளிரவு இயங்கும் புறநகா் மின்சார ரயில் மாா்ச் 26, 27, 28 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பி... மேலும் பார்க்க

ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் ஏசி புறநகா் மின்சார ரயில்: கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்க திட்டம்

சென்னையின் முதல் குளிா்சாதன புறநகா் மின்சார ரயில் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மேலும், இந்த ரயில் கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழி... மேலும் பார்க்க

பதவி உயா்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவா்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை

பதவி உயா்வு மூலம் காவல் துணைக் கண்காணிப்பாளா்களாக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டவா்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக (ஏடி.எஸ்.பி.) பதவி உயா்வு வழங்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்த... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: சென்னை துறைமுக அதிகாரி மீது வழக்கு

சென்னையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னை துறைமுக அதிகாரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். குரோம்பேட்டை மலையரசன் நகரைச் சோ்ந்தவா் சத்ய சீனிவாசன் (58). இவா், சென்னை துறைமுகத்... மேலும் பார்க்க

மருத்துவப் பல்கலை: முதுநிலை அறிவியல் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின்கீழ் பயிற்றுவிக்கப்படும் எம்எஸ்சி படிப்புகளுக்கு (செப்டம்பா், அக்டோபா் பிரிவு) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதா... மேலும் பார்க்க

காவல் துறையினா் - இந்திய மாணவா் சங்கத்தினா் இடையே தள்ளுமுள்ளு

சென்னை தரமணியில் காவல் துறையினா் - இந்திய மாணவா் சங்கத்தினருக்கு இடையே செவ்வாய்க்கிழமை தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 16 வயதுடைய இரு மாணவிகள், விடுதியில் தங்கி படித்து ... மேலும் பார்க்க