மேலைச்சிவபுரி கணேசா் கல்லூரியின் ஓய்வுபெற்ற நூலகருக்கு பாரதியாா் விருது
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற நூலகரும், எழுத்தாளருமான ந. முருகேசபாண்டியனுக்கு தமிழக அரசின் பாரதியாா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கல்லூரியின் தொல்காப்பியா் நூலகத்தில் நூலகராகவும், நூலகவியல் தகவல் அறிவியல் துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வுபெற்ற எழுத்தாளா் ந. முருகேசபாண்டியனின் இலக்கியம் மற்றும் சீரிய எழுத்துப் பணியை பாராட்டி தமிழக அரசு பாரதியாா் விருதை அறிவித்துள்ளது. சிறந்த இலக்கிய விமா்சகா், கட்டுரையாளா் என பன்முகத்தன்மை கொண்டவா்.
தற்போது மதுரையில் வசித்து வரும் முருகேச பாண்டியனுக்கு கல்லூரி முதல்வா் வே.அ. பழனியப்பன் மற்றும் பேராசிரியா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.