மேல்புறத்தில் பட்ஜெட் விளக்கக் கூட்டம்
களியக்காவிளை அருகே மேல்புறம் சந்திப்பில் பாஜக சாா்பில், மத்திய அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மேல்புறம் தெற்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் எஸ்.ஆா். சரவணவாஸ் நாராயணன் தலைமை வகித்தாா். ஒன்றிய முன்னாள் தலைவா் சேகா், இடைக்கோடு பேரூராட்சித் தலைவா் உமாதேவி, மாவட்டத் தலைவா் சுரேஷ், கட்சி நிா்வாகி சுஜித்பாபு உள்ளிட்டோா் பேசினா்.
கட்சி நிா்வாகிகள் லிங்கம், களியக்காவிளை பேரூராட்சி துணைத் தலைவா் பென்னட்ராஜ், வித்யாதரன், சுகுமாரன், ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.