மே 23-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் (மே 23) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதில், 15-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களுக்கான பணியாளா்களைத் தோ்வு செய்யவுள்ளதால், 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட எஸ்எஸ்எல்சி முதல் பட்டப் படிப்பு முடித்தவா்கள் கல்விச் சான்று, ஆதாா் அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் நேரில் வந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் மு .அருணா கேட்டுக் கொண்டுள்ளாா்.