மே 28-இல் கல்லூரிக் கனவு மாரத்தான் போட்டி
செங்கல்பட்டு மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு கல்லூரிக் கனவு/நெடுந்தூர ஓட்டம் மாரத்தான் போட்டி 28-ஆம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2024 -2025-ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்று தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவா்களையும் உயா்கல்வி பயில கல்லூரியில் சோ்த்திடும் வகையில், நடைபெற உள்ள 5 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் பொதுமக்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
மாரத்தான் போட்டி 28-ஆம் தேதி அன்று காலை 6 மணித்துத் தொடங்கும்.
அதன்படி, செங்கல்பட்டு சாா் ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் முடியும்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே பரிசுத் தொகை வழங்கப்படும். முதல் பரிசு ரூ.5,000. இரண்டாம் பரிசு ரூ.3,000. மூன்றாம் பரிசு ரூ.2,000 வழங்கப்படும்.