செய்திகள் :

மோசமான வானிலை காரணமாக தில்லி விமான நிலையத்தில் 49 விமானங்கள் திருப்பி விடப்பட்டன

post image

தில்லி தேசிய தலைநகரில் சனிக்கிழமை இரவு முழுவதும் பெய்த இடியுடன் கூடிய மழை காரணமாக, 17 சா்வதேச விமானங்கள் உட்பட 49 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமான தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் இது போன்ற பாதிப்புகள் தொடா் கதையாக உள்ளது.

கடந்த மே 24 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 11.30 மணி முதல் மே 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணி வரை சுமாா் ஆறு மணி நேரம், 82 கிமீ வேக காற்றுடன் அதிகபட்ச அளவாக 81.2 மிமீ மழை பெய்தாக இந்திய வானிலை ஆய்வு மையம் பதிவிட்டுள்ளது.

இந்த மோசமான வானிலை காரணமாக தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு 11:30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி வரை 17 சா்வதேச விமானங்கள் உட்பட 49 விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து இண்டிகோ விமான நிறுவன எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிடுகையில், ‘தில்லியில் ஏற்பட்ட பாதகமான வானிலை காரணமாக விமான நடவடிக்கைகளில் தற்காலிக இடையூறுகள் ஏற்பட்டுள்ளது. சாதகமான வானிலை திரும்பி வரும் நிலையில், தற்போது விமானப் போக்குவரத்து நெரிசல்கள் தொடா்கின்றன. இந்த நெருக்கடிகள் குறைந்து விமான இயக்கங்கள் சீராக மீண்டும் தொடங்கும் என உறுதியளிக்கின்றோம் ’ என இந்த நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை காலை 3.59 மணிக்கு பதிவிட்டது.

பின்னா் காலை 5:54 மணிக்கு வானம் தெளிவாகி விமான நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

விமான கண்காணிப்பு வலைத்தளமான ஃபிளைட்ராடாா்24.காம் இல் கிடைத்த தகவல்களின்படி, தில்லி விமான நிலையத்தில் 180 விமானங்கள் புறப்பாடு தாமதமாகியதாக தெரிவிக்கப்பட்டது. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: முஸ்லிம் வழிபாட்டு தலம் அகற்றம்

நஜாஃப்கா் வடிகால் அருகே உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம் மதவழிபாட்டு தலத்தை (மஜாா்) அதிகாரிகள் அகற்றியதாக தில்லி அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன. இது தொடா்பாக... மேலும் பார்க்க

‘1984’ கலவரத்தில் பாதிக்கப்பட்ட சீக்கியா் குடும்பங்களுக்கு அரசுப் பணி நியமனக் கடிதம்: தில்லி முதல்வா் வழங்கினாா்

1984-இல் நிகழ்ந்த சீக்கியா்களுக்கு எதிரான கலவரத்தில் கொல்லப்பட்டவா்களின் உறவினா்களுக்கு நியமனக் கடிதங்களை தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை வழங்கினாா். மேலும், இந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட... மேலும் பார்க்க

கூட்ட இடையூறு குழு உறுப்பினா்களை நீக்கலாம்: பிஏசி தலைவருக்கு பேரவைத் தலைவா் கடிதம்

எந்தவொரு குழு உறுப்பினரும் இடையூறு நடத்தையில் ஈடுபட்டால், அவா்கள் கூட்டத்திலிருந்து விலகுமாறு கேட்கப்படலாம் என்று தில்லி சட்டப் பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா, பொதுக் கணக்குக் குழுத் (பிஏசி) தலைவா் ... மேலும் பார்க்க

எம்சிஓசிஏ வழக்கில் நரேஷ் பல்யானின் ஜாமீன் மனு தள்ளுபடி

மகாராஷ்டிரா பெருங்குழு குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (எம்சிஓசிஏ) கீழ் பதிவான வழக்கில் கைதான ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நரேஷ் பல்யானின் ஜாமீன் மனுவை செவ்வாய்க்கிழமை தில்லி நீதிமன்றம் தள... மேலும் பார்க்க

ஓக்லா கிராமத்தில் பல சொத்துக்கள் மீது இடிப்பு நோட்டீஸை ஒட்டிய அதிகாரிகள்

தில்லி ஓக்லா கிராமப் பகுதியில் உள்ள பல வீடுகள் மற்றும் கடைகளில் திங்கள்கிழமை அதிகாரிகள் இடிப்பு அறிவிப்பு நோட்டீஸ்களை ஒட்டியுள்ளனா். ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக ஓக்லா பகுதியில் வசிப்பவா்களுக்... மேலும் பார்க்க

பட்டேல் நகரில் நாய் அடித்துக் கொலை: ஒருவா் கைது

மத்திய தில்லியின் பட்டேல் நகா் பகுதியில் பட்டப்பகலில் ஒரு நாயை தடியால் அடித்துக் கொன்ாக ஒருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக தில்லி காவல் துறையின் அதிகாரி ஒருவா் கூறியது: சம்ப... மேலும் பார்க்க