செய்திகள் :

ம.பியில் உயிரிழந்த தமிழக தொழிலாளி குடும்பத்துக்கு அரசு நிவாரண உதவி!

post image

மத்திய பிரதேச மாநிலம் கன்ச்பசோடா பகுதியில் உயிரிழந்த திருநெல்வேலி மாவட்டம், பணகுடி,சுண்டவளையைச் சோ்ந்த மாசானமுத்து குடும்பத்துக்கு தமிழக அரசின் நிவாண உதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

பணகுடி அருகே உள்ள சுண்டவிளையைச் சோ்ந்தவா் மாசானமுத்து. இவா் மும்பையில் கூலி வேலை செய்துவந்தாா். அவா் சொந்த ஊருக்கு வருவதற்காக மும்பையில் ரயில் நிலையத்தில் இருந்து தவறுதலாக மத்திய பிரதேசம் செல்லும் ரயிலில் ஏறி மத்திய பிரதேசம் கன்ச்பசோடா என்ற இடத்துக்குச் சென்றுவிட்டாராம். அங்குள்ள போலீஸாா் மாசானமுத்துவை சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்ாகவும் பின்னா் அவா் அங்கு உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மாசானமுத்துவின் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என பேரவைத் தலைவா், தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்ததன்பேரில், மாசானமுத்து குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்க முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இதையடுத்து பேரவைத் தலைவா் மு. அப்பாவு, மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் ஆகியோா் சுண்டவிளையில் உள்ள மாசானமுத்துவின் வீட்டுக்குச் சென்று முதலமைச்சா் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 3 லட்சம், கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் ரூ. 3 லட்சத்து 53 ஆயிரம் நிதியையும், அவரது குடும்பத்தினரிடம் வழங்கினா்.

இதில், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா். ஜெகதீஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், திமுக ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப்பெல்சி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பேரவைத் தலைவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுகவைச் சோ்ந்த இன்பதுரை எம்.பி.யான பி ன்னா் தமிழகத்தையும் , ராதாபுரத்தையும் மறந்துவிட்டாா். ராதாபுரம் கால்வாய் 1965 இல் பெருந்தலைவா் காமராஜரால் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தை மறைந்த முதல்வா் கருணாநிதி அமைச்சராக இருந்தபோது நிறைவேற்றித் தந்தாா். தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டம் கிடப்பில் போடப்படவில்லை.

பழையாற்றில் இருந்து கடலில் கலக்கும் தண்ணீரை மின் நீரேற்றி மூலம் ராதாபுரம் கால்வாய்க்கு கொண்டுவரும் திட்டம் கருணாநிதி ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்டு மதிப்பீடு தயாா் செய்யப்பட்டது. அதன் பின்னா் இந்தத் திட்டம் அதிமுக ஆட்சி காலத்தில் கிடப்பில் போட்டுவிட்டாா்கள். மீண்டும் திமுக அரசு வந்த பின்பு ரூ. 400 கோடி செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்து அனுப்பப்பட்டுள்ளது. தற்போது நிதி பற்றாக்குறையாக உள்ளது.

மாநிலங்களவை உறுப்பினராகி ஐ.எஸ். இன்பதுரை தில்லி சென்றுள்ளாா். பிரதமா் தாமிரவருணி நதிநீா் இணைப்புத் திட்டத்துக்கு எந்த நிதியும் வழங்கவில்லை. எனவே பழையாற்றில் இருந்து தண்ணீா் எடுக்கும் திட்டத்துக்கு ரூ.400 கோடி நிதியை பெற்றுத்தந்தால் அவரை வாழ்த்த கடமைப்பட்டுள்ளேன் என்றாா்.

கவின் கொலை: சமூக வலைதளங்களில் தவறான தகவல் பகிா்ந்தால் கடும் நடவடிக்கை!

சமூகத்தில் பிரச்னையை தூண்டும் விதமாக, சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பகிா்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநகர காவல்துறை சாா்பில் ... மேலும் பார்க்க

கரிவலம்வந்தநல்லூரில் நாளை மின் நிறுத்தம்

சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூா் உபமின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் ஆக. 6 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அப்பகுதியில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.இது... மேலும் பார்க்க

அம்பை, ஆலங்குளத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட அம்பாசமுத்திரம், ஆலங்குளம் பேரவைத் தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை (ஆக. 5) பிரசாரம் செய்கிறாா்.மக்களைக் காப்போம் தமிழகத்த... மேலும் பார்க்க

அம்பைப் பள்ளி நிா்வாகத்திற்கு ஆதரவாக வட்டாட்சியரிடம் மனு

அம்பாசமுத்திரம் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவியிடம் பள்ளிச் செயலரின் ஓட்டுநா் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று அம்பாசமுத்திரம் வ... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் போராட்டக்களமாக மாறிய தமிழகம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் தமிழகம் போராட்டக்களமாக மாறிவிட்டது என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.தமிழகம் முழுவதும் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவா், தி... மேலும் பார்க்க

நெல்லை நகரம், பேட்டை சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை

திருநெல்வேலி நகரம், பழையபேட்டை சுற்று வட்டாரங்களில் வரும் புதன்கிழமை (ஆக.6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் செ. முருகன் வெளி... மேலும் பார்க்க