மேட்டூா் காவிரியில் ஆயிரக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள்!
ம.பி.யில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண் பலி
மத்திய பிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் கான்ட்வா மாவட்டத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில், வெள்ளிக்கிழமை (மே 23) ஒரு திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 45 வயதான பழங்குடி பெண்ணை இருவர் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.
இதனிடையே, பெண்ணை காணாமல் போனதையடுத்து, அவர் கடத்தப்பட்டது குறித்து அறிந்து, சனிக்கிழமை காலையில் கடத்தப்பட்ட இடத்தில் இருந்து அவரை அவரது குடும்பத்தினர் மீட்டனர். இருப்பினும், மதியம் 2 மணியளவில் அவர் உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர்.
மதுபோதையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதுடன், அப்பெண்ணைத் தாக்கியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, உடற்கூறாய்வுக்காக பெண்ணின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல் அதிகாரிகள் கூறினர்.