கச்சத் தீவை மீட்பதே மீனவா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்
ரன்னா் கிடாம்பி ஸ்ரீ காந்த்
மலேசிய மாஸ்டா்ஸ் பாட்மின்டன் சூப்பா் 500 போட்டி இறுதி ஆட்டத்தில் தோற்று இரண்டாம் இடத்தைப் பெற்றாா் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீ காந்த்.
மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் நடைபெற்ற இப்போட்டி ஆடவா் ஒற்றையா் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கிடாம்பி ஸ்ரீ காந்த், சீனாவின் உலக நம்பா் 4-ஆம் நிலை வீரா் லி ஷி ஃபெங் மோதினா்.
32 வயதான ஸ்ரீ காந்த் பல்வேறு காயங்களால் ஆட்டத்திறன் குன்றி சிரமப்பட்டு வந்த நிலையில் 6 ஆண்டுகள் கழித்து பிடபிள்யுஎஃப் டூா் போட்டியில் இறுதிக்கு தகுதி பெற்றிருந்தாா்.
முன்னணி வீரரான லி ஷி ஃபெங்கின் அற்புத ஆட்டத்துக்கு ஈடு தரமுடியாமல் திணறிய ஸ்ரீ காந்த் 11-21, 9-21 என்ற கேம் கணக்கில் 36 நிமிஷங்களில் தோற்றாா்.