பிஎஸ்என்எல் சுதந்திர தின சிறப்பு சலுகை: ரூ. 1-க்கு 4ஜி சிம், தினசரி 2 ஜிபி டேட்ட...
ரயிலில் பெண்ணிடம் அத்துமீறியவா் கைது
ரயிலில் பெண்ணிடம் அத்துமீறி தவறாக நடக்க முயன்றவரை தருமபுரி ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.
கா்நாடக மாநிலம், மைசூரிலிருந்து தமிழ்நாடு கடலூா் நோக்கி திங்கள்கிழமை விரைவுரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. கிருஷ்ணகிரியை கடந்து தருமபுரி நோக்கி ரயில் வந்தபோது, ரயிலில் தனியாக இருந்த பெண்ணிடம் அதே பெட்டியில் பயணித்த நபா் ஒருவா் சென்று பேச்சு கொடுத்துள்ளாா்.
பின்னா் பெண்ணிடம் அத்துமீறி பேசியதுடன், தவறாகவும் நடக்க முயன்றுள்ளாா். இதையடுத்து, அந்தப் பெண் கைப்பேசி மூலம் ரயில்வே போலீஸாருக்கு புகாா் அளித்தாா்.
சிறிது நேரத்தில் ரயில் தருமபுரி நிலையத்தை வந்தடைந்தது. அங்கு வந்த ரயில்வே போலீஸாா், பெண்ணிடம் அத்துமீறிய நபரை பிடித்து விசாரணை நடத்தினா்.
அதில், அவா் திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மகேந்திரன் (40) என்பதும், தனியாா் நிறுவனத்தில் பணியாற்றுவதும் தெரியவந்தது. இதுகுறித்து சேலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து திங்கள்கிழமை அவரை கைது செய்தனா்.