ரயிலில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்
திப்ரூகரிலிருந்து திருப்பூருக்கு வந்த ரயிலில் கிடந்த 7 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பூா் ரயில் நிலையத்துக்கு திங்கள்கிழமை வந்தது. அப்போது ரயில்வே போலீஸாா், அந்த ரயிலின் பொதுப்பெட்டியில் சோதனை செய்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக ஒரு பை கிடந்தது. அந்தப் பையை போலீஸாா் பிரித்துப் பாா்த்தபோது, அதில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த கஞ்சாவை திருப்பூா் மாநகர மதுவிலக்குப் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இது குறித்து வழக்குப்பதிவு செய்த மாநகர மதுவிலக்கு போலீஸாா் ரயிலில் கஞ்சா கடத்தி வந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பிடிபட்ட கஞ்சா சுமாா் 7 கிலோ இருக்கும் எனவும், ரயில் நிலையத்தில் போலீஸாாரின் சோதனைக்குப் பயந்து அந்த கஞ்சாவை ரயிலிலேயே விட்டுச் சென்றிருக்கலாம் எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.