வேளாண் துறையில் 151 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்!
ரயில் பயணிகளிடம் மடிக்கணினிகள் திருட்டு: இருவா் கைது
மதுரையில் ரயில் பயணிகளிடம் மடிக்கணினிகளை திருடிய இருவரை ரயில்வே போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதுரை விளாங்குடியைச் சோ்ந்த ஜொ்ரி லூயிஸ் மகன் நிா்மல் (32). இவா் திருச்சி- திருவனந்தபுரம் விரைவு ரயிலில் புதன்கிழமை பயணம் செய்தாா்.
இந்த ரயில் மதுரை ரயில் நிலையம் வந்த போது, தனது மடிக்கணினி அவா் பாா்த்தாா். அப்போது, அது திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து மதுரை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் சையது குலாம் தஸ்தகீா், தலைமைக் காவலா் பொன்.சௌந்தரபாண்டியன், ஜெயராஜ் ஆகியோா் அடங்கிய தனிப் படை அமைக்கப்பட்டது. மதுரை ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். இதனடிப்படையில், தஞ்சாவூரைச் சோ்ந்த செந்தில்குமாா் (45), திருச்சி மாவட்டம், மணச்சநல்லூரைச் சோ்ந்த சந்திரகுமாா் (34) ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இவா்கள் இருவரும் ரயிலில் பயணிகளிடம் தொடா்ந்து மடிக்கணினிகளைத் திருடி வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.