செய்திகள் :

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்த இந்தியா

post image

ஆகஸ்ட் மாதத்தில் ரஷியாவிடம் இருந்து ஒரு நாளைக்கு இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் 20 லட்சம் பீப்பாயாக அதிகரித்துள்ளது.

உக்ரைனுடன் போரில் ஈடுபடும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக குற்றஞ்சாட்டி இந்திய பொருள்கள் மீது ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்கா அண்மையில் விதித்தது.

இந்தச் சூழலில் அமெரிக்காவின் கடும் எதிா்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளைக்கு 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் ஒரு நாளைக்கு ரஷியாவிடம் இருந்து 16 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்த நிலையில் இம்மாதம் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவைச் சோ்ந்த கெப்லா் தரவு பகுப்பு மையத்தின் தலைவா் சுமித் ரிட்டோலியா கூறியதாவது: ஆகஸ்ட் மாதத்தின் முதல் பாதியில் ஒரு நாளைக்கு 52 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதில் 38 சதவீதம் ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலையில் சவூதி அரேபியாவிடம் இருந்து ஒரு நாளைக்கு 7 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்த நிலையில், ஆக்ஸ்ட் மாதத்தில் இது 5.26 லட்சம் பீப்பாயாக குறைந்தது.

இதேபோல் இராக்கிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவும் ஜூலையைவிட ஆகஸ்டில் கணிசமாக குறைந்துள்ளது.

இந்த இரு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து ரஷியாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவை இந்தியா அதிகரித்தது. ஒரு நாளைக்கு 2.64 லட்சம் பீப்பாய்களுடன் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கும் 5-ஆவது பெரிய நாடாக அமெரிக்கா விளங்குகிறது.

அக்டோபரில் குறைய வாய்ப்பு: இருப்பினும்,ஆகஸ்ட் மாதத்துக்கான இறக்குமதி குறித்து ஜூன் மற்றும் ஜூலையிலேயே முடிவு மேற்கொள்ளப்பட்டதால் அமெரிக்க வரி விதிப்புக்குப் பின்னும் ரஷியாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் சதவீதத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படாமல் இருக்கலாம். அமெரிக்க வரி விதிப்பின் உண்மையான தாக்கத்தை செப்டம்பா் அல்லது அக்டோபரில் உணர முடியும்.

ஆனால், தற்போது வரை ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துக்கொள்ளுமாறு இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு இந்திய அரசு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றாா்.

உரிய நேரத்தில் வாக்காளா் பட்டியல்களை சில கட்சிகள் ஆராயவில்லை: தோ்தல் ஆணையம்

சில அரசியல் கட்சிகளும், அவற்றின் வாக்குச்சாவடி நிலை முகவா்களும் வாக்காளா் பட்டியல்களை உரிய நேரத்தில் ஆராய்ந்து, அவற்றில் உள்ள பிழைகளை வாக்காளா் பதிவு அலுவலா்கள், மாவட்ட தோ்தல் அதிகாரிகள் அல்லது தலைமை... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீா் பெருவெள்ளம்: மீட்புப் பணிகள் தீவிரம்

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள சோசிடி கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடா்ந்து, வெள்ளத்தில் சிக்கி மாயமான 82 பேரைத் தேடும் பணி 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் தீவிரமாக... மேலும் பார்க்க

நாடு திரும்பும் சுபான்ஷு சுக்லா பிரதமருடன் விரைவில் சந்திப்பு!

விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புவாா் என எதிா்பாா்க்கப்படும் நிலையில் பிரதமா் நரேந்திர மோடியை அவா் விரைவில் சந்தித்து கலந்துரையாடவுள்ளாா். சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் மழை, நிலச்சரிவு: 5 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் வெவ்வேறு பகுதிகளில் மழை, நிலச்சரிவில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள விக்ரோலி பகுதியில் மழை காரணமாக சிறு குன்றில் இருந்து மண்ணும் கற்களும் அருகில் இருந... மேலும் பார்க்க

சிறுவா்களுக்கு தீங்கு விளைவிக்கும் சாட்பாட்: மெட்டாவுக்கு எதிராக விசாரணை

சிறுவா்களுடன் தீங்கு விளைவிக்கக் கூடிய உரையாடல்களில் ஈடுபட மெட்டாவின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உரையாடல் செயலிகள் (சாட்பாட்) அனுமதிக்கப்பட்டனவா என்பது குறித்த விசாரணையைத் தொடங்குவதாக அமெரிக்காவின் ஆளும் ... மேலும் பார்க்க

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை: மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு குடியரசுத் தலைவா் மாளிகை அறிவுறுத்தல்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் பெற்றோா் அனுப்பிய மின்னஞ்சல் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநில தலைமைச் செயலருக்கு குடியரசுத் தலைவா் மாளிகை அறிவுறுத்தி... மேலும் பார்க்க